
18th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு "செம்மொழி இலக்கிய விருது" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு (தேசிய நெடுஞ்சாலை-715-ன் கலியாபோர்-நுமலிகார் பிரிவின் 4-வழித்தடம்) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2026) அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெற்ற புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரயில்களை காணொலி வழியாக கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
- திப்ரூகர் - கோமதிநகர், காமக்யா - ரோஹ்தக், கொல்கத்தா (ஹௌரா) - ஆனந்த் விஹார், கொல்கத்தா (சியால்டா) - பனாரஸ், கொல்கத்தா (சந்திரகாச்சி) - தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
- முன்னதாக சனிக்கிழமை (ஜன. 17), அலிபூர்துவார் - எஸ்எம்விடி பெங்களூரு, அலிபூர்துவார் - மும்பை (பன்வேல்), நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி - திருச்சி ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்திருந்த நிலையில், நாட்டில் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

