//
Type Here to Get Search Results !

14th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

14th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டு எண்கள்
  • அகில இந்திய மொத்தவிலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுப் பணவீக்க விகிதம் 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான (2024 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.83% - ஆக (தற்காலிகம்) உள்ளது. 
  • 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் நேர்மறையாக உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் முதன்மையாக கனிமங்கள், இயந்திரங்கள், ஜவுளிகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.
  • 2025 - ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாத த்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணில் மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் 0.71% ஆக இருந்தது.
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினின் முதல் ராணி
  • ஸ்பெயினின் அரச குடும்ப வரலாற்றில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இளவரசி லியோனோர் (Princess Leonor) நாட்டின் முதல் ராணியாகப் பொறுப்பேற்று வரலாறு படைக்கவுள்ளார்.
  • மன்னர் ஃபிலிப் VI( King Felipe VI) மற்றும் ராணி லெடிசியாவின் மூத்த மகளான இவர் அக்டோபர் 31, 2005ல் பிறந்தார். இவர் சாண்டா மரியா டி லாஸ் ரோசல்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார். 
  • இடைநிலைப் படிப்பை முடித்த பிறகு ஐக்கிய ராஜ்ஜியத்தின் வேல்ஸ் கிளாமோர்கனில் உள்ள UWC அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலை பட்டம் பெற்றவர். 
  • ஆகஸ்ட் 17, 2023ல் மூன்றாண்டு ராணுவக் கல்வியைத் தொடங்குவதற்கு பொது ராணுவ அகாடமியில் சேர்ந்தார். இது ஸ்பெயின் மன்னர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய பயிற்சியாகும். 
  • 2014 இல் அவருடைய தாத்தா ஜுவான் கார்லோஸ் I பதவி விலகிய பிறகு இவருடைய தந்தை அரியணை ஏறியதைத் தொடர்ந்து, லியோனாருக்கு ஸ்பானிஷ் கிரீடத்தின் வாரிசுக்கான அனைத்து பாரம்பரிய பட்டங்களும் வழங்கப்பட்டன.
  • லியோனாருக்கு ஸ்பானிஷ் கிரீடத்தின் வாரிசுக்கான அனைத்து பாரம்பரிய பட்டங்களும் வழங்கப்பட்டன. அவை அஸ்டூரியாஸ் இளவரசி, ஜிரோனா இளவரசி, வியனா இளவரசி, மோன்ட்பிளாங்கின் டச்சஸ், செர்வெராவின் கவுண்டஸ் மற்றும் பாலாகுயர் லேடி. லியோனரின் 18வது பிறந்த நாளான அக்டோபர் 31, 2023 அன்று கோர்டெஸ் முன் முறையாக வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
  • 18வது பிறந்தநாளான அக்டோபர் 31, 2023ல் ஸ்பெயின் அரசியலமைப்புக்கு விசுவாசமாக பிரமாணம் செய்து, அதிகாரப்பூர்வமாக அரியணைக்கான தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel