
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம்
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புதுதில்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
- இந்தக் கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி; மணிப்பூர் ஆளுநர்; கோவா, ஹரியானா, மேகாலயா, சிக்கிம், தில்லி யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள்; அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள்; மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பரிசீலிக்க வேண்டிய, மத்திய நிதியமைச்சரிடம் பங்கேற்பாளர்கள் பல குறிப்பிடத்தக்க பரிந்துரைகளை முன் வைத்தனர்.
- குறிப்பாக, மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டம் (SASCI) அதிக ஒதுக்கீடுகளுடன் தொடரப்பட வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தினர்.
- 2020-21 முதல், மத்திய அரசு, மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடன்களாக ரூ.4.25 லட்சம் கோடிக்கு மேல் விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

