
7th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இந்த பாலம் மதுரை தொண்டி சாலையில் அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது.
- உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய கடந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்திருந்தது.
- இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆலையில் வின்பாஸ்ட் விஎப்6 மற்றும் விஎப்7 கார்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
- இந்நிலையில், இந்த ஆலையை மேலும் விரிவுபடுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க முடிவு செய்திருந்தது.
- வியட்நாம் தலைநகர் ஹனாயில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்தாகியுள்ளது.
- விரிவாக்கத்துக்காக ஏற்கெனவே உள்ள ஆலையை ஒட்டி 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கான அனுமதிகளையும் வழங்கும். மேற்கண்ட ஆலை விரிவாக்கத்துக்காக ரூ.4,498 கோடியை வின்பாஸ்ட் முதலீடு செய்கிறது.
- விரகனூர் சுற்றுச்சாலை அருகே வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டா் அரங்கில், தமிழ்நாடு வளா்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
- மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 'தமிழ்நாடு வளா்கிறது' என்ற தலைப்பில் இன்று (டிச. 7) நடைபெற்றுவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரூ.36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

