
31st DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025
- கத்தார் தலைநகர் தோஹோவில் சர்வதேச சதுரங்க சம்மேளனத்தின் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதன் கடைசி நாளில் கடினமான BLITZ போட்டி நடைபெற்றது.
- வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் நேடிர்பெக்கை 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் நார்வே சதுரங்க நட்சத்திரம் கார்ல்சன் வீழ்த்தினார். இதில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசி வெண்கலம் வென்றார்.
- மகளிர் பிரிவு பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை Bibisara Assaubayeva வென்றார். முன்னதாக நடைபெற்ற ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதிலும் இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசிக்கு 3ஆவது இடமே கிடைத்தது. மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி கொனேரு வெண்கலம் வென்றார்.
- இந்த போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் 20ஆவது முறையாக கார்ல்சன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். அவருக்கு 74 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
- ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் தற்போதுள்ள இருவழி பாதைகளின் இருமருங்கிலும் அணுகு சாலை அமைப்பதோடு, அவற்றை பலப்படுத்தவும், விரிவுபடுத்தவுமான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கான மொத்த மூலதனச் செலவு ரூ.1,526.21 கோடியாகும். இதில் கட்டுமான செலவு ரூ.966.79 கோடியும் அடங்கும். தேசிய நெடுஞ்சாலை எண்.326-ஐ மேம்படுத்துவது இந்த வழித்தடத்தில் விரைவான, பாதுகாப்பான, மிகவும் நம்பகமான பயணத்தை உறுதி செய்யும். மேலும் தெற்கு ஒடிசா பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படும்.
- மகாராஷ்டிராவில் நாசிக் – கோலாப்பூர் – அக்கால்கோட் வழித்தடத்தில் 374 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மொத்த மூலதனச் செலவு ரூ.19,142 கோடியாகும். இந்த உள்கட்டுமானம் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட கோட்பாட்டின் கீழ் சாலை போக்குவரத்தில் மிகமுக்கியமான நடவடிக்கையாகும்.
- இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் பயண நேரம் 31 மணியிலிருந்து 11 மணியாக குறையும். மேலும், இந்த வழித்தடம் பாதுகாப்பான, விரைவான, தடையற்ற போக்குவரத்து தொடர்பை பயணிகளுக்கும், சரக்கு வாகனங்களுக்கும் வழங்கும்.
- இந்த கட்டுமானத்தின் போது நேரடியாக 251.06 லட்சம் மனித நாட்கள் வேலை வாய்ப்பும் மறைமுகமாக 313.83 லட்சம் மனித நாட்கள் வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும்.

