
30th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2025-26ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
- 2025-26ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த விகிதம் முதல் காலாண்டில் இருந்த 7.8 சதவீதம் மற்றும் 2024-25ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இருந்த 7.4 சதவீதம் என்பதைக் காட்டிலும் அதிகமாகும்.
- நவம்பர் 2025ம் ஆண்டில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் 2025ல் இருந்த 5.2 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறைந்தது. இது ஏப்ரல் 2025க்குப் (5.1%) பிறகு மிகக் குறைந்த விகிதமாகும்.
- நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்க விகிதம் ஜனவரி 2025ம் ஆண்டில் இருந்த 4.26 சதவீதத்திலிருந்து நவம்பர் 2025ல் படிப்படியாகக் குறைந்து 0.71 சதவீதமாக இருந்தது.
- ஜனவரி 2025-ல் 36.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் 2025-ல் 38.13 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது.
- 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
- மேலும், 2030-ம் ஆண்டில், 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற மதிப்பீட்டுடன், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் நிலையில் உள்ளது.
- இந்த வளர்ச்சியின் வேகம், 25-26ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
- பணவீக்க விகிதம் குறைவான அளவில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருகிறது. ஏற்றுமதி செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், வர்த்தகத் துறைக்கு வலுவான கடன் உதவிகளுடன் நிதிபரிவர்த்தனைகள் சாதகமாக நீடிக்கின்றன.
- ஒடிசா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உள்நாட்டிலேயே 'பினாகா' ரக ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன.
- ஏற்கனவே 40 கி.மீ. மற்றும் 75 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், 120 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் நீண்ட தூர 'பினாகா' ரக ஏவுகணை புதிதாக வடிவமைக்கப்பட்டது.
- இந்த புதிய ஏவுகணையைச் செலுத்துவதற்குப் புதிய வாகனங்கள் எதுவும் தேவையில்லை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லாஞ்சர்கள் மூலமே இதனை இயக்க முடியும்.
- இந்நிலையில் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில், நேற்று (29ம் தேதி) இந்த ஏவுகணை முதன்முறையாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
- சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட 120 கி.மீ. தூரத்திலுள்ள இலக்கை இந்த ராக்கெட் 'மிகத் துல்லியமாக' தாக்கி அழித்துச் சாதனை படைத்தது. இந்தச் சோதனை வெற்றி பெற்ற அதே நாளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ராணுவத்திற்கு இந்த ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

