
29th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அகழ்வாராய்ச்சியில் காஷ்மீரின் 2000 ஆண்டு பழமையான பௌத்த வரலாற்றுத் தளம் கண்டுபிடிப்பு
- பாராமுல்லாவின் செகன்போரா கிராமத்தில் உள்ள சாதாரண மண் மேடுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் ஆய்வின் மூலம், 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு பௌத்த தளம் கண்டறியப்பட்டுள்ளது.
- இங்கு குஷாணர் காலத்தைச் சேர்ந்த ஸ்தூபிகள், மடாலயக் கட்டிடங்கள் மற்றும் பழங்காலக் கட்டுமானங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- பிரான்ஸ் நாட்டு அருங்காட்சியகம் ஒன்றில் இருந்த 3 ஸ்தூபிகளின் பழைய மற்றும் தெளிவற்ற புகைப்படங்கள் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
- அந்தப் புகைப்படங்களே தற்போது செகன்போராவில் ஒரு மாபெரும் பௌத்த நாகரிகம் புதைந்து கிடப்பதைக் கண்டறிய முக்கியக் காரணமாக அமைந்தன.
- செகன்போரா பகுதி, குஷாணர்களின் தலைநகராகக் கருதப்படும் 'ஹுவிஷ்கபுரா' உடன் தொடர்புடைய ஒரு முக்கியமான பௌத்த சமய மையமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
- பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் - 26 மாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் சுட்டிக் காட்டப்பட்டத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2030 - ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தித் திறனை எட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
- பாரிஸ் ஒப்பந்தத்தின் படி,தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ள பங்களிப்பின் கீழ், 2030 - ம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற இலக்கிற்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே, ஜூன் 2025 - ல், புதைபடிவமற்ற எரிபொருள் ஆதாரங்களிலிருந்து அதன் ஒட்டுமொத்த மின்சக்தி உற்பத்திக்கான நிறுவு திறனில் 50% என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.
- ஆகஸ்ட் 2025 - ல் புதைபடிவமற்ற மின்சக்தி உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறனில் 250 ஜிகாவாட் மைல்கல்லை இந்தியா கடந்தது. நவம்பர் 2025 - ல் ஒட்டு மொத்த புதைபடிவமற்ற மின்சக்தி உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறன் 262.74 ஜிகாவாட்டாக உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் (509.64 ஜிகாவாட்) 51.5% ஆகும்.
- 2025 - ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகபட்ச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் (நவம்பர் வரை) சேர்க்கப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 44.51 ஜிகாவாட் ஆகும்.
- இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 24.72 ஜிகாவாட்டை விட ஏறக்குறைய இருமடங்கு அதிகமாகும். நவம்பர் 2025 - ல் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிறுவு திறன் 253.96 ஜிகாவாட்டை எட்டியுள்ளது, இது நவம்பர் 2024 - ல் இருந்த 205.52 ஜிகாவாட்டை விட 23% க்கும் கூடுதலாகும்.
- எரிசக்தி உற்பத்தித் திறனில் சூரியசக்தி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 20.85 ஜிகாவாட்டுடன் ஒப்பிடுகையில், சூரியசக்தி உற்பத்தித் திறன் 34.98 ஜிகாவாட்டாக உள்ளது.
- ஜனவரி 2025-ல் சூரிய எரிசக்திக்கன நிறுவப்பட்ட திறன் 100 ஜிகாவாட் என்ற மைல்கல்லைக் கடந்தது. நவம்பர் 2024-ல் இருந்த 94.17 ஜிகாவாட்டுடன் ஒப்பிடுகையில், நவம்பர் 2025-ல் சூரிய எரிசக்தி உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறன் 41% அதிகரித்து 132.85 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
- காற்றாலைத் திறனும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.2 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தித் திறனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 5.82 ஜிகாவாட் திறன் அதிகரித்துள்ளது. மார்ச் 2025-ல் காற்றாலை மின் உற்பத்திக்கான நிறுவு திறன் 50 ஜிகாவாட் என்ற நிலையில் உள்ளது.
- 29 ஜூலை 2025 அன்று, மின்சார உற்பத்தியில் இந்தியா வரலாற்றுச் சாதனையாக மிக உயர் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு திறனை எட்டியது.
- அந்த நாளில், நாட்டின் 203 ஜிகாவாட் என்ற ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 51.5% புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.
- சூரிய மின்சக்தி உற்பத்தித் திறனில், உலக அளவில், இந்தியா 3 - வது இடத்திலும், காற்றாலை மின்சக்தி திறனில் 4 - வது இடத்திலும், ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கன உற்பத்தித் திறனில் 4வது இடத்திலும் உள்ளது.
- மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் 29, 2025 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகளுக்கான லாய்ட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த உயர இலகுரக ரேடார்கள், பினாகா ராக்கெட் லாஞ்சர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து தாக்கும் அமைப்பு போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- லாய்ட்டர் வெடிமருந்துகள் முக்கிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்படும். அதே சமயம் குறைந்த உயர இலகுரக ரேடார்கள், சிறிய அளவிலான, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறிந்து அதனைக் கண்காணிக்கும்.
- நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் ராக்கெட்டுகள், அதிக தொலைவில் உள்ள இலக்குகளை திறம்படத் தாக்குவதற்கான பினாகா ரக ராக்கெட் அதன் துல்லியத்தையும் மேம்படுத்தும்.
- மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து அழிக்கும் அமைப்பு, உத்திசார் போர் பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவத்தின் முக்கிய சொத்துக்களைப் பாதுகாக்கும்.
- இந்திய கடற்படைக்காக, போலார்ட் புல் இழுவைப் படகுகள், உயர் அதிர்வெண் மென்பொருள் கொண்ட ரேடியோக்கள், மேன்பேக் மற்றும் நீண்ட தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்பு ஆகியவற்றை குத்தகைக்கு எடுப்பதற்கான 'தேவை அடிப்படையிலான ஒப்புதல்' வழங்கப்பட்டது.
- இந்திய விமானப்படைக்காக, தானியங்கி பதிவு அமைப்பு, அஸ்ட்ரா மார்க் - II ஏவுகணைகள், சிமுலேட்டர் மற்றும் நீண்ட தூர வழிகாட்டுதல் கருவிகள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

