
28th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
- கர்நாடக மாநிலம் கர்வார் கடற்படை தளத்தில் இருந்து கல்வாரி வகையைச் சேர்ந்த ஐஎன்எஸ் வக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பயணத்தைத் தொடங்கினார்.
- அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி ஆயுதப் படைகளுடன் சென்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த இரண்டாவது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எனப் பதிவிட்டப்பட்டுள்ளது.
- கோவா, கா்நாடகம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான குடியரசுத் தலைவரின் 4 நாள்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நீா்மூழ்கிக் கப்பல் பயணம் அமைந்துள்ளது.
- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கடந்த 2006, பிப்.13-இல் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நீா்மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டாா். அவருக்குப் பிறகு நீா்மூழ்கியில் பயணிக்கும் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவா் என்ற பெருமை திரெளபதி முா்மு பெற்றுள்ளார்.
- தனது பதவிக் காலத்தில் விமானப் படையின் இரு போா் விமானங்களில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சிறப்புக்குரிய முா்மு, கடந்த 2023-இல் சுகோய் 30 எம்கேஐ, கடந்த அக்டோபரில் ரஃபேல் என இரு போா்விமானப் பயணங்களை மேற்கொண்டாா்.
- எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இந்தப் போா் நிறுத்தம் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது.
- இந்தப் போா் நிறுத்தத்தின் கீழ், இரு தரப்பிலும் ராணுவ நடமாட்டங்கள், வான் எல்லை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். போா் நிறுத்தம் 72 மணி நேரம் நீடித்த பிறகு, கடந்த ஜூலை மாத மோதலின்போது கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- எல்லைப் பகுதியில் சந்தித்த தாய்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சா் நாட்டப்பன் நாா்க்பனீத், கம்போடிய பாதுகாப்புத் துறை அமைச்சா் டீசீஹா ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
- 11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது.
- அந்தக் கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவந்தது.
- அதன் ஒரு பகுதியாக இரு இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.
- அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.
- மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிமின் முன்முயற்சியில் உருவான இந்த ஒப்பந்தம், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை சா்ச்சையை தீா்க்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

