//
Type Here to Get Search Results !

27th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

விழுப்புரத்தில் கிடைத்த மெருகேற்றப்பட்ட கைக்கோடாரி
  • விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையிலானோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டதில் பழமையான புதியகற்கால கற்கருவி மற்றும் இரும்பு ஆயுதத்தினை கண்டறிந்துள்ளனர்.
  • பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது புதிய கற்காலத்தை சேர்ந்த கல் ஆயுதம் மற்றும் சிதைந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் மத்தியில் உடைந்த இரும்பு பொருள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர்.
  • தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கற்கருவி 6.5 செ.மீ நீளம் கொண்ட புதிய கற்காலத்தை சேர்ந்த கை கோடாரியாகும். இக்கை கோடாரி ஒரு புறம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் உள்ளது. 
  • கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். புதிய கற்கால காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது.
  • தென்பெண்ணையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் முதுமக்கள் தாழியின் பானை ஓடுகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் ஆங்காங்கே சிதைந்து மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இடத்தில் பூமியின் மேற்பரப்பில் 17செ.மீ நீளம் கொண்ட உடைந்த இரும்பு ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது.
  • பழங்காலத்தில் இறந்தவர்களின் உடலை அல்லது எலும்புகளை பெரிய மட்பாண்டங்களான தாழியில் வைத்துப் புதைப்பது வழக்கம், இறந்தவரின் உடலுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தாழியின் பக்கத்திலேயே வைத்து புதைத்தனர். 
  • தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் கண்டறிந்த முதுமக்கள் தாழியின் பக்கத்தில் இறந்தவர்கள் பயன்படுத்திய வாள் , ஆபரணங்கள், நெல்மணிகள் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
  • அதுபோல தென்பெண்ணையில் கண்டெடுத்த இரும்பு ஆயுதமும் சிதைந்த முதுமக்கள் தாழியின் பக்கத்தில் இருந்து மண்ணரிப்பினால் பூமியின் மேற்பரப்பில் வந்திருக்கலாம் அதுமட்டும் அல்லாமல் தென்பெண்ணை கரையோரம் புதியகற்காலம், பெருங்கற்காலம், சங்ககாலம், சோழர்காலம் வரையிலான தொல்லியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவிக்கிறார்.
புதுதில்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு 2025ஐ மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் 'பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2025'-ஐ தொடங்கி வைத்தார். 
  • இரண்டு நாள் மாநாட்டை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஏற்பாடு செய்துள்ளது. 
  • NIA-ன் புதுப்பிக்கப்பட்ட குற்றக் கையேடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் மற்றும் தொலைந்து போன/கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட ஆயுத தரவுத்தளம் ஆகியவற்றையும் அமைச்சர் வெளியிட்டார். 
  • இந்த மாநாட்டில் மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய் மற்றும் திரு பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறைச்  செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
  • இந்த மாநாட்டில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் மத்திய நிறுவனங்கள்/துறைகளின் அதிகாரிகள், தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel