
24th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
- இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டுச் சோதனைகள் (User Evaluation Trials - UET) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
- இந்த ஏவுகணை பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களை மிகத் துல்லியமாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. சோதனையின் போது, மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் இலக்குகள் முதல், அதிக உயரத்தில் வெகு தொலைவில் உள்ள இலக்குகள் வரை அனைத்தையும் இந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.
- இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை சீக்கர் (RF Seeker), இரண்டு நிலைகளில் செயல்படும் திட ராக்ஜெட் மோட்டார் (Dual-pulse solid rocket motor) மற்றும் ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த ஏவுகணை அமைப்பின் அனைத்து உதிரிபாகங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இந்தியத் தொழில்துறையினரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
50 ஓவரில் 574 ரன்கள் எடுத்து விஜய் ஹசாரே தொடரில் பீகார் அணி உலக சாதனை
- விஜய் ஹசாரே கோப்பையில் இன்று அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீகார் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறது.
- இதன் மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை பிஹார் அணி படைத்திருக்கிறது.
- இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்திருந்தது. இதனை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் அணி முறியடித்திருக்கிறது.
- பீகார் அணியின் 14 வயது வீரரான வைபவ சூர்யவன்சி 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்து வைபவ் சூர்யவன்சி இரட்டை சதத்தை தவறவிட்டார். அதேபோன்று ஆயுஷ் 56 பந்துகளில் 116 ரன்கள் அடித்தார். சகிப்புல் கனி 32 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
- ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செற்கைகோள் உதவும் என்று சொல்லப்படுகிறது. இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும்.
- அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
- இந்தச் செயற்கைக்கோளின் எடை சுமார் 6,100 கிலோ ஆகும். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லி மெட்ரோவின் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- அவை: 1. ஆர்.கே. ஆசிரம மார்க் முதல் இந்திரபிரஸ்தா வரை (9.913 கி.மீ.), 2. ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 வரை (2.263 கி.மீ.) 3. துக்ளகாபாத் முதல் காலிந்தி கஞ்ச் வரை (3.9 கி.மீ.).
- இந்தத் திட்டம் தேசியத் தலைநகருக்குள் இணைப்பை மேலும் மேம்படுத்தும். தில்லி மெட்ரோவின் ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் மொத்த திட்டச் செலவு ரூ.12014.91 கோடி ஆகும்.
- இதற்கான நிதி மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும். இந்த வழித்தடம் அனைத்து கடமைப் பவன்களுக்கும் இணைப்பை வழங்கும், இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள அலுவலக ஊழியர்களுக்கும் வருகை தருவோருக்கும் அவர்களின் அலுவலக வாசலிலேயே போக்குவரத்து வசதியை வழங்கும்.
- இந்த இணைப்பு மூலம் தினசரி சுமார் 60,000 அலுவலக ஊழியர்களும் 2 லட்சம் அலுவலகத்திற்கு வருகை தருவோரும் பயனடைவார்கள். இந்த வழித்தடங்கள் மாசுபாட்டையும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டையும் மேலும் குறைத்து, வாழ்வதற்கு எளிதான சூழலை மேம்படுத்தும்.
- இன்று, தில்லி மெட்ரோ ஒரு நாளைக்கு சராசரியாக 65 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 2025 ஆகஸ்ட் 08 அன்று 81.87 லட்சம் ஆகும்.
- எம்ஆர்டிஎஸ்-இன் முக்கிய அளவுகோல்களான நேரந்தவறாமை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கி, தில்லி மெட்ரோ நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளது.
- தற்போது, தில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சுமார் 395 கி.மீ நீளம் மற்றும் 289 நிலையங்களைக் கொண்ட மொத்தம் 12 மெட்ரோ வழித்தடங்களை தில்லி மெட்ரோ ரயில் கழகம் இயக்குகிறது.
- இன்று, தில்லி மெட்ரோ இந்தியாவில் மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டுள்ளதுடன், உலகின் மிகப்பெரிய மெட்ரோக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.

