2024 -2025ம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உற்பத்தி குறித்த அறிக்கை / REPORT ON GROSS DOMESTIC PRODUCT OF THE STATES FOR THE YEAR 2024 - 2025
TNPSCSHOUTERSDecember 12, 2025
0
2024 - 2025ம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உற்பத்தி குறித்த அறிக்கை / REPORT ON GROSS DOMESTIC PRODUCT OF THE STATES FOR THE YEAR 2024 - 2025: 2024-2025ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு இடையிலான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 16% வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
தொழிற்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் தொடர் ஓட்டத்தால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஆண்டு பண மதிப்பு, ஜிஎஸ்டிபி அதாவது மாநில உள் உற்பத்தி விகிதம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில், 2024 -2025ம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உற்பத்தி புள்ளி விவர கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதில் மாநிலங்களுக்கு இடையேயான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம் தமிழ்நாடு முதலிடம்
தமிழ்நாடு – 16.0%
கர்நாடகா – 12.8%
உ.பி – 12.7%
மகாராஷ்டிரா- 11.7%
குஜராத்- 10.2%
மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு
மகாராஷ்டிரா - ரூ. 45.31 லட்சம் கோடி
தமிழ்நாடு – ரூ.31.18 லட்சம் கோடி
உ.பி - ரூ. 29.78 லட்சம் கோடி
கர்நாடகா – ரூ.28.83 லட்சம் கோடி
குஜராத் – ரூ.26.72 லட்சம் கோடி
மாநிலங்களின் தனி நபர் வருமானம்
கர்நாடகா – ரூ. 3.80 லட்சம்
தமிழ்நாடு – ரூ. 3.61 லட்சம்
குஜராத் – ரூ. 3.31 லட்சம்
மகாராஷ்டிரா – ரூ.3.09 லட்சம்
உ .பி.- ரூ.1.08 லட்சம்
ENGLISH
REPORT ON GROSS DOMESTIC PRODUCT OF THE STATES FOR THE YEAR 2024 - 2025: Tamil Nadu tops the list of states with a growth rate of 16% in inter-state GDP growth rate in the financial year 2024-2025. Tamil Nadu has surpassed all states by registering a growth rate of 16% in inter-state GDP growth rate in the financial year 2024-2025.
This achievement has been possible due to the continuous drive given to the industry by Tamil Nadu Chief Minister M.K. Stalin. The total annual monetary value of all goods and services produced within the boundaries of a state is called GSTP, i.e. the State Domestic Product Rate.
In this regard, the Reserve Bank has released the State Gross Domestic Product Statistics Handbook for the year 2024-2025. In this, Tamil Nadu has surpassed all states and topped the list of states in the inter-state GDP growth rate.
Tamil Nadu tops the list of states with the highest GDP growth rate