
1st DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% வளர்ச்சி
- இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% உயர்ந்துள்ளது.
- இது கடந்த ஆண்டை விடவும், முந்தைய காலாண்டையும் விடவும் மிக அதிகம் ஆகும். அமெரிக்காவின் வரிகள் போன்ற சவால்களையும் தாண்டி இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும்.
- தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட இந்த புள்ளிவிவரங்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைகள் துறைகளின் வலுவான பங்களிப்பை காட்டுகின்றன.
- மேற்கூறிய காலகட்டத்தில் நிலையான விலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 48.63 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 44.94 லட்சம் கோடியாக இருந்தது.
- பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7% உயர்ந்து ரூ. 85.25 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
- நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடன் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.
- இந்த நிலையில், அதன் வெளிப்பாடாக, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, 'ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.டி.இ.ஏ)' தலைமைப் பதவியேற்றுக்கொள்ள 37 ஜனநாயக நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
- இது, அனைத்து இந்தியர்களுக்கும், அதேபோல தேர்தல் அதிகாரிகளுக்கும் பெருமிதம் அளிக்கும் தருணமாக அமைந்துவிட்டது" என்றார். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், டிச. 3-இல் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

