//
Type Here to Get Search Results !

17th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025ஐ தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.12.2025) சென்னையில், விளையாட்டு வீரர் மேம்பாடு, பயிற்சி முறைகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, உளவியல், விளையாட்டு உலகில் செயற்கை நுண்ணறிவு, பயிற்சி மற்றும் உயர் செயல்திறன் சூழலியல், விளையாட்டுப் பகுப்பாய்வு, 2036 ஒலிம்பிக் தொலைநோக்குத் திட்டம், விளையாட்டு மருத்துவம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025ஐ தொடங்கி வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனைத்து விளையாட்டு விடுதி வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி, உடல்திறன், நல்வாழ்வு தரவுகளைக் கொண்டு செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடுவதை அடிப்படையாக கொண்ட அத்லெட் மேலாண்மை அமைப்பையும் (ATHLETE MANAGEMENT SYSTEM) தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்திய மற்றும் ஜோர்டான் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
  • ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள்அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஜோர்டான் சென்றார். 
  • நேற்று பிரதமர் மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவும் தலைநகர் அம்மானில் நடந்த இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்கள்.
  • பட்டத்து இளவரசர் ஹூசைன் மற்றும் ஜோர்டானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், முதலீட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். 
  • இதில் பேசிய மன்னர் இரண்டாவது அப்துல்லா, ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும், இந்தியாவின் பொருளாதார வலிமையையும் இணைத்து தெற்காசியா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் ஒருபொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்றார். 
  • தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,\\" உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் , வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ஜோர்டானுடனான இருதரப்பு வர்த்தகத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்கப்படும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், பின்டெக், ஹெல்த் -டெக் மற்றும் அக்ரி டெக் ஆகிய துறைகளில் இந்தியா-ஜோர்டான் ஒன்றிணைந்து செயல்பட இரு நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்\\" என்றார். 
  • பிரதமர் மோடியை ஜோர்டான் பட்டத்து இளவரசர் இரண்டாவது அல் உசைன் பின் அப்துல்லா தனது காரில் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்சென்றார்.
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது
  • பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக எத்தியோப்பியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
  • தலைநகர் அடிஸ் அபாபா சென்ற அவருக்கு, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' (The Great Honor Nishan of Ethiopia) என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். 
  • வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்குக் கிடைக்கப்பெற்ற 28வது உயரிய விருது இதுவாகும். பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel