Type Here to Get Search Results !

10th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு முழுவதும் 25 அன்புச் சோலை மையங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக "அன்புச் சோலை" மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 "அன்புச் சோலை" மையங்களை தொடங்கி வைத்தார்கள்.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது
  • ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியாா் விடுதியில் 'இந்திய நகா்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025' ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  • இதில், மத்திய நகா்ப்புற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா், இணை அமைச்சா் டோகன் சாஹூ ஆகியோா் கலந்துகொண்டு 'நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை வழங்க, அதை தமிழக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சென்னை மாநகா் போக்குவரத்து மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
  • நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான 'நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை' மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.
  • இந்த தேசிய விருது, சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விடியல் பயணம், பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் திட்டம், தேசிய பொது போக்குவரத்து அட்டை, மின்சார பேருந்து மூலம் மாசுபாட்டை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முன்னெடுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சேவைக்காக 2 தேசிய விருதுகள் அறிவிப்பு
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவிவகார அமைச்சகத்தால் இரண்டு முக்கிய தேசிய விருதுகளால் சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருதும், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரயில் என்ற பிரிவில் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தவிருதுகள் ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து இந்தியா மாநாடு நிறைவு விழாவில் வழங்கப்பட்டன.
உத்தராகண்ட் வெள்ளி விழாவில் ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்
  • உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.7,210 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • இவற்றில் குடிநீர் , நீர்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி, விளையாட்டு மற்றும் திறன்மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கியுள்ளன.
  • பிஎம் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், 28,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியை நிதியை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த விடுவித்தார். 
  • பிரதமர் தொடங்கிய திட்டங்கள் மூலம் டேராடூனில் 23 மண்டலங்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படும். பிதோராகர் மாவட்டத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
  • அரசு கட்டிடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்படும். நைனிடாலில் உள்ள ஹல்த்வானி அரங்கத்தில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.
  • டேராடூனில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் சாங் அணை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 
  • நைனிடாலில் தொடங்கப்பட்ட ஜமாராணி அணை திட்டம் மூலம் குடிநீர், நீர்ப்பாசனம் ஆகியவை வழங்கப்படும் மற்றும் மின் உற்பத்தி செய்யப்படும். 
  • சம்பவாட் பகுதியில் துணை மின்நிலையங்கள், பெண்கள் விளையாட்டு கல்லூரி உட்பட இதர திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel