
8th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எர்ணாகுளம் - பெங்களூர் உள்பட 4 வந்தே பாரத் ரயில் கே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து எர்ணாகுளம்-பெங்களூர் உள்பட நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், ஃபிரோஸ்பூர்-டெல்லி மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.
- பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தவிர, ஃபிரோஸ்பூர்–டெல்லி, லக்னோ–சஹரன்பூர் மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- இந்த நான்கு புதிய ரயில்களுடன், நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 160 - ஐக் கடந்துள்ளது.
- இந்திய விமானப் படைக்கு 97 தேஜஸ் எம்கே-1ஏ இலகுரக போா் விமானங்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏல் உடன் ரூ.62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கையொப்பமிட்டது.
- வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல், கடல்சாா் கண்காணிப்புப் பணிகள் என பல்வேறு திறனுடையதாக தேஜஸ் போா் விமானம் திகழ்கிறது.
- தேஜஸ் இலகுரக போா் விமானங்களுக்கு 113 ஜெட் என்ஜின்களை கொள்முதல் செய்ய அமெரிக்காவின் ‘ஜிஇ ஏரோஸ்பெஸ்’ நிறுவனத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்தது.
- இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

