
5th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் புதிய பாடத்திட்டம் உருவாக்க முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு
- மாநில கல்விக் கொள்கையை பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
- பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க, பாடவாரியாக நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028.ல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக்கு முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இரண்டாவது கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நாட்டின் வடகிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு குரல்களை பொதுவான அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- மேகாலயா முதல்வர் கான்ட்ராட் கே சங்கா முயற்சியில் இந்த இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு தொடக்கிவைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைந்த நோக்கம், மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் கலாசார அடையாளத்தை தேசிய அளவில் எடுத்துச்செல்வதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- முதல் கட்டமாக அடுத்த 45 நாட்களுக்குள் குழுவின் எதிர்காலப் போக்கை வகுக்க ஒன்பது பேர் கொண்ட சிறப்புக் குழுவைத் தலைவர்கள் அமைத்துள்ளனர்.
- இந்தக் குழு, முன்மொழியப்பட்ட இயக்கத்தின் கட்டமைப்பு, செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் முறைகள் மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கும்.
- குறிப்பாக வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியுடன் ஒரே வடகிழக்கு என்ற அமைப்பு, இணைந்து செயல்படுமா? அல்லது சுயாதீனமான பாதையைத் தேர்ந்தெடுக்குமா? என்பதையும் இக்குழு ஆலோசித்து முடிவு செய்யும்.
- ஆய்வுக் கப்பல் (பெரியது) வகையில் மூன்றாவதான இக்ஷாக்கை இணைத்துக் கொள்வதன் மூலம் இந்தியக் கடற்படை அதன் நீர்வள ஆய்வுத் திறன்களை மேம்படுத்தத் தயாராக உள்ளது. இது தெற்கு கடற்படை காமாண்டைத் தளமாகக் கொண்ட முதல் கப்பலாகும்.
- இந்தக் கப்பல் 2025 நவம்பர் 06 அன்று கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெறும் விழாவில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் முறையாக சேவையில் ஈடுபடுத்தப்படும்.
- கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இக்ஷாக் என்பது, கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கைக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக நிற்கிறது.
- இந்தக் கப்பல் 80% க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் வெற்றியையும் ஜிஆர்எஸ்இ நிறுவனம் மற்றும் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இடையேயான கூட்டு ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கிறது.
- சமஸ்கிருதத்தில் 'வழிகாட்டி' என்று பொருள்படும் 'இக்ஷாக்' என்ற பெயர், துல்லியம் மற்றும் நோக்கத்திற்கான காவலாளியாக கப்பலின் பங்களிப்பை சரியாக வரையறை செய்கிறது.
- துறைமுகங்கள் மற்றும் வழிசெலுத்தல் சேனல்களின் முழு அளவிலான கடலோர மற்றும் ஆழ்கடல் நீரியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் விதத்தில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் உருவாக்கப்படும் தரவு, கடலில் பாதுகாப்பான வழிசெலுத்தலை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.

