
30th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிபிஐசி தலைவராக விவேக் சதுர்வேதி நியமனம்
- மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவராக இந்திய வருவாய் சேவை அதிகாரியான விவேக் சதுர்வேதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
- நவம்பர் 28, 2025 அன்று பணி ஓய்வு பெற்ற சஞ்சய் குமார் அகர்வாலுக்குப் பிறகு இவர் பதவியேற்கிறார். இந்திய வருவாய் சேவையின் 1990 பிரிவை செர்ந்த (IRS) அதிகாரியான சதுர்வேதி, தற்போது சிபிஐசி வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.
- இதற்கிடையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் விவேக் சதுர்வேதியை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

