
29th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
- பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்பரப்புக் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
- அப்போது அவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாணயத்தைச் சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அது மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திய வெள்ளி நாணயம் என்பது உறுதியானது.
- இந்த நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் ஆகும். இது கி.பி. 985 முதல் 1,014 ஆம் ஆண்டு வரை ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார். இந்த அரிய வெள்ளி நாணயத்தின் இரு பக்கங்களிலும் பல முக்கியமான பொறிப்புகள் உள்ளன.
- தேவநாகரி எழுத்தில் 'ஸ்ரீராஜராஜ' என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு உருவம் மலரைக் கையில் ஏந்தியவாறு நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள், மேலே பிறை மற்றும் கீழே மலர் ஆகியவை உள்ளன.
- வலது பக்கம் திரிசூலமும் விளக்கும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு உருவம் சங்கை ஏந்தி அமர்ந்திருக்க, அவரது இடது கை அருகே மீண்டும் தேவநாகரி எழுத்தில் 'ஸ்ரீராஜராஜ' என்று எழுதப்பட்டுள்ளது.
- இதுவரை தென்பெண்ணை ஆற்றுப்பகுதியின் மேற்பரப்புக் கள ஆய்வுகளில் 50-க்கும் மேற்பட்ட ராஜராஜ சோழன் காலத்துச் செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.
- இந்த நிலையில், தற்போது முதன்முறையாக வெள்ளியால் ஆன நாணயம் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதன் தொன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
- தாமிரவருணி, வைகை, காவேரி போன்ற ஆற்றுப் படுகைகளில் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கவுன்சிலுக்கான தேர்தல், லண்டனில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தின்போது நடந்தது. பல்வேறு நாடுகள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், இந்தியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
- கவுன்சில் தேர்தலில் மொத்தமாக 169 நாடுகள் வாக்களித்தன. அதில் இந்தியாவுக்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்தன. பெரும்பாலான நாடுகளின் ஆதரவைப் பெற்று இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உலகளாவிய கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிலைப்பாட்டிற்கும், பங்களிப்புக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
- சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
- சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய நாடாக விளங்கும் இந்தியா, இந்த கவுன்சில் பதவியின் மூலம், கடல்சார் தொழிலின் விதிமுறைகளை உருவாக்குவதிலும், சர்வதேச கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும்.
- நீல்கிரி வகுப்பைச் சேர்ந்த நான்காவது போர் கப்பல் (திட்டம் 17A), மசகான் டாக் ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள மூன்றாவது போர் கப்பலான "தாரகிரி" (யார்டு 12653), நவம்பர் 28, 2025 அன்று, மும்பையில் உள்ள அந்த கப்பல் கட்டுமான நிறுவனத்தால் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.
- போர்க்கப்பலின் வடிவமைப்பு, கட்டுமானம் போன்ற அம்சங்களில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
- செயல்திட்டம் 17A - ன் கீழ், பன்முகத்தன்மை கொண்ட தளங்களில்,போர்க்கப்பல்கள், கடற்பகுதிகளில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 1980 -ம் ஆண்டு மே 16 முதல் 2013 -ம் ஆண்டு ஜூன் 27 வரை இந்தியக் கடற்படையின் ஒரு பகுதியாக இருந்த, லியாண்டர் வகையைச் சேர்ந்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாராகிரியின் மற்றொரு படைப்பாக இந்த தாராகிரி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த போர்க்கப்பல் 33 ஆண்டுகால புகழ்பெற்ற சேவையை நாட்டுக்கு வழங்கியுள்ளது. இந்த அதிநவீன போர்க்கப்பல் கடற்படை வடிவமைப்பு, ராடார் கண்காணிப்பு அமைப்புக்களால் எளிதில் கண்டறிய முடியாத, துப்பாக்கிச் சூடு, தானியங்கி மற்றும் உயிர்வாழும் தன்மை போன்ற அம்சங்களுடன் ஒரு மேம்பட்ட போர்க்கப்பலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் போர்க்கப்பல் கட்டுமானத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டியுள்ளதற்கான அடையாளாச் சின்னமாகவும் அமைந்துள்ளது.

