- குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும் உச்ச நீதிமன்றம் அதற்கு அளித்த பதில்களும் / 14 QUESTIONS RAISED BY INDIAN PRESIDENT & SUPREME COURT'S ANSWER: அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 200/201 இன் கீழ் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் முடிவுகளுக்கு நீதிமன்றம் எந்தவிதமான காலக்கெடுவையும் விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
- அதேநேரம் ஆளுநர் காலவறையின்றி நிறுத்தி வைப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது. குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 14 பதில்களின் முழு விவரங்களை பார்ப்போம்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 14 பதில்களின் முழு விவரம்
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரிடம் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?- பதில்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பிவைக்கப்படும் போது, அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம்.
- ஒப்புதலை நிறுத்திவைப்பது என்பது, அரசியல் அமைப்பு பிரிவு 200-ன் முதல் நிபந்தனையின்படி மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் கட்டாயம் திருப்பி அனுப்புவதோடு இருக்க வேண்டும். (மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது) முதல் நிபந்தனை நான்காவது விருப்பம் இல்லை; மாறாக, இது ஒப்புதலை நிறுத்திவைக்கும் விருப்பத்திற்குத் தகுதி சேர்க்கிறது.
- எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்டால், அது கட்டாயமாகச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
- மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநரை நிறுத்திவைக்க அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கையைப் பலவீனப்படுத்தும்.
- மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநர் வெறுமனே நிறுத்திவைக்க முடியும் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
- பதில்: பொதுவாக, ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் செயல்படுகிறார். ஆனால் பிரிவு 200-ல், ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.
- பிரிவு 200-ன் இரண்டாவது நிபந்தனையில் உள்ள "அவரது கருத்தில்" என்ற வார்த்தையின் பயன்பாட்டால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, ஆளுநர் பிரிவு 200-ன் கீழ் விருப்ப அதிகாரத்தைப் பெறுகிறார். மசோதாவைத் திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவருக்காக ஒதுக்கவோ ஆளுநருக்கு விருப்ப அதிகாரம் இருக்கிறது.
- பதில்: பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் நீதி விசாரணைக்கு உட்பட்டவை கிடையாது. அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவின் தகுதி மறுஆய்வில் நீதிமன்றம் நுழைய முடியாது.
- இருப்பினும், நீண்ட, விளக்கம் அளிக்கப்படாத மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மை நிலவும் வெளிப்படையான சூழ்நிலையின் போது, நீதிமன்றம் ஒரு வரையறுக்கப்பட்ட ஆணையை பிறப்பித்து, ஆளுநரை ஒரு நியாயமான காலத்திற்குள் பிரிவு 200-ன் கீழ் தனது செயல்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிடலாம், ஆனால் விருப்ப அதிகாரத்தின் தகுதியைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது.
- பதில்: பிரிவு 361 நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடை தான். இருப்பினும், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நீடித்த செயலற்ற நிலையில் இருக்கும போது, இந்த நீதிமன்றம் பயன்படுத்த அதிகாரம் பெற்ற வரையறுக்கப்பட்ட நீதி மறுஆய்வு வரம்பை ரத்து செய்ய பிரிவு 361 ஐ பயன்படுத்த முடியாது. ஆளுநர் தனிப்பட்ட விலக்கைப் பெற்றிருந்தாலும், ஆளுநரின் பதவி உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
6. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதி விசாரணைக்கு உட்பட்டதா?
7. அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்த நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையை விதிக்க முடியுமா?
- பதில்கள் - கேள்விகள் 5, 6 மற்றும் 7 ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் பதிலளிக்கப்பட்டிருக்கிறது
- அரசியல் பிரிவுகள் 200 மற்றும் 201-ன் உரை, நமது கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் சட்டமியற்றும் செயல்பாட்டில் எழக்கூடிய பல்வேறு சூழல்கள் மற்றும் சமநிலைப்படுத்தும் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு அதிகார மையங்கள் தங்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு ஒரு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- எனவே காலக்கெடுவை விதிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டம் இவ்வளவு கவனமாகக் காக்கும் இந்த நெகிழ்ச்சித்தன்மைக்கு முற்றிலும் முரணானது.
- எனவே அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு இல்லாத நிலையில், பிரிவு 200-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறையால் ஒரு காலக்கெடுவை நிர்ணயிப்பது உச்ச நீதிமன்றத்திற்குப் பொருத்தமானதாக இருக்காது.
- ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதே காரணங்களுக்காக, பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நீதி விசாரணைக்கு உட்பட்டது அல்ல.
- அதே காரணத்திற்காக, பிரிவு 201-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குக் குடியரசுத் தலைவரும் கட்டுப்பட முடியாது.
- பதில்: ஆளுநர் ஒரு மசோதாவை ஒதுக்கும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டவர் அல்ல. குடியரசுத் தலைவரின் அந்தநிலை திருப்தியே போதுமானது. தெளிவின்மை அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்யலாம்.
- பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200 மற்றும் பிரிவு 201-ன் கீழ் முறையே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதி விசாரணைக்கு உட்பட்டவை அல்ல. மசோதாக்கள் சட்டம் ஆன பின்னரே, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
- பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் குடியரசுத் தலைவர்/ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தரவுகளை இந்த நீதிமன்றத்தால் எந்த விதத்திலும் மாற்ற முடியாது.
- அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
- பதில்: கேள்வி 10-ன் பதிலின் அடிப்படையில் பதிலளிக்கப்படுகிறது. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கே இடமில்லை.
- பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் சட்டமியற்றும் பங்கை மற்றொரு அரசியலமைப்பு அதிகார மையத்தால் மாற்ற முடியாது.
- பதில்: இந்தக் கேள்வி இந்தப் பரிந்துரையின் செயல்பாட்டுத் தன்மைக்குத் தொடர்பில்லாததால், இதற்குப் பதிலளிக்கப்படவில்லை.
- பதில்: கேள்வி 10-ன் ஒரு பகுதியாகப் பதிலளிக்கப்பட்டிருக்கிறது (விளக்கம் - அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
- பதில்: இது சம்பந்தமே இல்லாதது எனக் கண்டறியப்பட்டதால் பதிலளிக்கப்படவில்லை.
ENGLISH
- 14 QUESTIONS RAISED BY INDIAN PRESIDENT & SUPREME COURT'S ANSWER: The Supreme Court, in response to 14 questions raised by President Draupadi Murmu under Article 143 of the Constitution, ruled that the court cannot impose any time limit on the decisions of the President and the Governor regarding the assent to bills under Articles 200/201 of the Constitution.
- At the same time, it has said that the Governor’s indefinite suspension is unconstitutional. Let us see the full details of the 14 answers given by the Supreme Court to the 14 questions raised by the President.
Full details of the 14 answers given by the Supreme Court to the 14 questions raised by President Draupadi Murmu:
1. What are the constitutional options available to the Governor when a bill is presented to him under Article 200 of the Constitution of India?- Answer: When the bill is passed in the Assembly and sent, the Governor can assent to the bill, withhold assent or reserve it for the President’s assent. The suspension of assent must be accompanied by the mandatory return of the bill to the legislature as per the first condition of Article 200 of the Constitution.
- The first condition (that the bill should be returned to the legislature) is not a fourth option; rather, it qualifies the option of suspending assent. Therefore, if the bill is suspended, it must be sent back to the legislature.
- Allowing the Governor to suspend the bill without returning it to the legislature would weaken the principle of federalism. The court rejected the central government’s argument that the Governor can simply suspend the bill without returning it to the legislature.
- Answer: Generally, the Governor acts under the assistance and advice of the Cabinet. But in Article 200, the Governor exercises his discretion. As indicated by the use of the words “in his opinion” in the second proviso to Article 200, the Governor derives discretionary power under Article 200. The Governor has discretionary power to return the Bill or to reserve it for the President.
- Answer: The actions of the Governor under Article 200 are not subject to judicial review. The Court cannot enter into a review of the merits of the decision taken.
- However, in a clear case of prolonged, unexplained and indefinite inaction, the Court may pass a limited order directing the Governor to perform his functions under Article 200 within a reasonable time, but shall not express any opinion on the merits of the discretionary power.
- Answer: Article 361 is a complete bar to judicial review. However, in the event of prolonged inaction of the Governor, Article 361 cannot be invoked to override the limited scope of judicial review that this Court is empowered to exercise under Article 200. Even if the Governor enjoys personal immunity, the office of the Governor is subject to the jurisdiction of the Supreme Court.
6. Is the exercise of discretionary power by the President under Article 201 of the Constitution of India subject to judicial review?
7. In the absence of any time limit and method of exercise of the powers of the President prescribed by the Constitution, can the President, through judicial orders, impose a time limit and method of exercise of the power under Article 201 of the Constitution of India?
- Answers - Questions 5, 6 and 7 have been answered simultaneously by the Supreme Court
- The text of Articles 200 and 201 of the Constitution is designed to provide the constitutional authorities with a certain flexibility in the exercise of their functions, taking into account the various circumstances and the need for balancing that may arise in the legislative process in a country like ours, a federal and democratic country.
- Therefore, the imposition of a time limit is completely inconsistent with this flexibility which the Constitution so carefully preserves.
- Therefore, in the absence of a time limit prescribed by the Constitution, it would not be appropriate for the Supreme Court to fix a time limit for the exercise of powers under Article 200 by the judiciary.
- For the same reasons given to the Governor, the President’s assent under Article 201 is not subject to judicial review. For the same reasons, the President cannot be bound by the time limit prescribed by the judiciary for the exercise of powers under Article 201.
- Answer: The President is not bound to seek the advice of the Court every time the Governor assigns a Bill. The President’s satisfaction is sufficient. In case of ambiguity or need for advice, the President can refer the matter to the Supreme Court for its opinion.
- Answer: No. Under Article 200 and Article 201 of the Constitution of India, the decisions of the Governor and the President respectively are not subject to judicial review at the stage before the law comes into force. The bills can be challenged in the court only after they become law.
- Answer: No. The exercise of the constitutional powers and orders of the President/Governor under Article 142 of the Constitution of India cannot be modified in any way by this Court. We make it clear that the Constitution, specifically Article 142, does not allow the concept of "implemented assent".
- Answer: This is answered on the basis of the answer to question 10. There is no question that a law made by the State Legislature under Article 200 cannot come into force without the assent of the Governor. The legislative role of the Governor under Article 200 cannot be replaced by another constitutional authority.
- Answer: This question is not answered as it is not relevant to the operational nature of this referral.
- Answer: Question 10 has been partially answered (Explanation - The Supreme Court has explained that the Constitution, particularly Article 142, does not allow the concept of "implemented consent".
- Answer: This was found to be irrelevant and was not answered.


