
12th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோவளம் கடற்கரைக்கு தொடர்ச்சியாக 5வது முறையாக சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்
- கடற்கரைகளில் நிலைத்தகு சுற்றுலாவை ஊக்குவிக்கவும், நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் எனப்படுகின்ற உலகத்தர அங்கீகாரம் டென்மார்க்கைச் சார்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி நீலக்கொடி சான்றிதழைப் பெற்று தமிழ்நாட்டின் முதல் நீலக்கொடிக் கடற்கரையாகத் திகழ்ந்து வருகிறது.
- சிறப்புமிகு இச்சான்றிதழினைக் கோவளம் கடற்கரை தொடர்ச்சியாக ஐந்தாவது முறை பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும்நிகழ்வாக அமைந்துள்ளது.
- பூடானில் இந்தியாவின் உதவியுடன் பூடானில் கட்டமைக்கப்பட்ட 1,020 மெகாவாட் திறன்கொண்ட மிகப் பெரிய நீா்மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
- இந்நிகழ்வில் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியெல் வாங்சுக்கும் உடன் இருந்தார். பூடானைச் சேர்ந்த டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன், 570 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத் திட்டத்திற்கு அதானி பவர் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.
- இரு நிறுவனங்களிடையே மின்சார கொள்முதலுக்கும் உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் தோபே மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி முன்னிலையில் டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் - அதானி பவர் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
- நவம்பர் 03, 2025 அன்று உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள பாபினா ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் (BFFR) ககன்யான் குழு தொகுதிக்கான பிரதான பாராசூட்களில், இஸ்ரோ ஒரு முக்கியமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- "ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் அமைப்பின் தகுதிக்கான ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனைகள்(IMAT), தொடரின் ஒரு பகுதியாக இந்த சோதனை உள்ளது. ககன்யான் குழு தொகுதிக்கு, பாராசூட் அமைப்பு மொத்தம் 4 வகையான 10 பாராசூட்களைக் கொண்டுள்ளது.
- உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 466.9 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- சீனாவின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், பிரான்ஸின் ரோமெய்ன் ஆஃப்ரெர் 454.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
- முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் 24 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 597-40x புள்ளிகளை குவித்து உலக சாதனையை சமன் செய்திருந்தார்.

