
11th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கம் வென்று அசத்தல்
- எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா (586.27 புள்ளி), வருண் தோமர் (586.26) ஆகியோர் முதல் இரண்டு இடங்கள் பிடித்து இறுதி பெட்டிக்குள் நுழைந்தனர்.
- இறுதிப்போட்டியில் சம்ரத் ராணா மொத்தம் 243.7 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். இவரை விட வெறும் 0.4 புள்ளிகள் பின்தங்கி, சீனாவின் ஹூ கை 243.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார்.
- தனிநபர் ஏர் பிஸ்டலில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய பிஸ்டல் வீரர் என்ற பெருமையையும் சம்ரத் ராணா பெற்றுள்ளார். சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்கும் முதல் போட்டியிலேயே இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
- இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே பிரிவில் இரண்டு இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். இந்த வெற்றியின் மூலம், இந்தியா தனது பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- உலகளாவிய பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான ஐ.நா. பருவநிலை மாநாடு (காப்-30) பிரேஸிலின் அமேஸான் பகுதியில் அமைந்துள்ள பெலெம் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.
- உலகம் முழுவதும் இருந்து சுமாா் 50,000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். ஆனால், இதில் அமெரிக்க பிரதிநிகள் பங்கேற்காதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராவும், கரியமில வாயு உள்ளிட்ட, புவியின் வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை காற்றில் மிக அதிகம் கலக்கும் இரண்டாவது நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது.
- ஆனால், பருவநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் கூறுவதை சந்தேகிக்கும் அதிபா் டிரம்ப் தலையில், அமெரிக்கா இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
- கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பாரிஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில், புவியின் வெப்பநிலை தொழில்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகம் இருக்கும் வகையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
- ஆனால் அந்த இலக்கை அடைவதில் தொடா்ந்து இழுபறி நீடித்துவருகிறது. இந்தச் சூழலில், பிரேஸிலில் தற்போது தொடங்கியுள்ள 30-ஆவது பருவநிலை மாநாடு மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

