
9th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகப் புத்தொழில் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- கோவை கொடிசியா வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (ஸ்டார்ட் அப் தமிழ்நாடு) சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு இன்று (அக்டோபர் 9) துவங்கியது.
- இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஸ்டார்ட் அப் இகோ சிஸ்டம், ஸ்டார்ட் அப் விஷன் 2035 ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மேலும் பல்வேறு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தொழில் முனைவோர்களுக்கான தொழில் முதலீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
- இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட பங்கேற்பளர்கள் பங்கேற்றுள்ளன. இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஒன்றிய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்கேற்றுள்ளன.
- கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார். தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்துக்கு, ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இதனைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிறிது தொலைவு நடந்துசென்ற முதல்வர் ஸ்டாலின், பின்னர் தனது வாகனத்தில் பயணித்தார்.
- தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
- 2025-26-ம் நிதியாண்டில் மேற்கு வங்கம் மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழுவின் கீழ் அடிப்படை மானியங்களின் முதல் தவணையாக ரூ.680.71 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- அம்மாநிலத்தின் தகுதியுடைய 3224 கிராமப் பஞ்சாயத்துகள், 335 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 21 மாவட்ட அமைப்புகளுக்கு இத்தொகை 2025, அக்டோபர் 06 அன்று விடுவிக்கப்பட்டது.
- கடந்த 2024-25-ம் நிதியாண்டு மற்றும் நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.4181.23 கோடி பரிந்துரைக்கப்பட்டதில் அடிப்படை மானியமாக ரூ.2082.13 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) 15-வது நிதி ஆணையத்தின் மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- மத்திய மானியத் தொகையின் முதல் தவணையாக 410.76 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகள், 650 தகுதி வாய்ந்த பஞ்சாயத்து தொகுதிகள் மற்றும் அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 13,327 கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளில் 13,092 தகுதியுள்ள கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் பயனடையும்.
- மத்திய அரசின் இந்த மானியத் தொகை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஆகியவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்காக, அதாவது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 திட்டங்களின் கீழ் பயன்படுத்தப்படும்.
- இதில் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகள் இடம் பெறாது. திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை பராமரிப்பது மற்றும் துப்புரவு பணிகள், வீடுகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் அதன் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மனித பயன்பாடுகள் போன்ற அடிப்படை சேவைகளுக்காக இந்த மானியத் தொகை செலவிடப்படும்.
- இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது.
- இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் 20 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை அவர் முன்மொழிந்தார்.
- அந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்ற நிலையில், அதை நிராகரித்த ஹமாஸ், சில திருத்தங்களை கேட்டது. ஆனால், திட்டதை ஏற்றாக வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
- இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே, அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட மஸ்த்தியஸ்த நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- இதைத் தொடர்ந்து, ஹமாசும் தன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதாகவும் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.