
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ் ஜெயகுமாரிக்கு மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது
- குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கினார்.
- தன்னார்வ சமூகப் பணியில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பத்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகம் மற்றும் அவற்றின் பத்து திட்ட அதிகாரிகளுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகளுக்கான விருது பெற்றவர்களில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ் ஜெயகுமாரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
- நாட்டு நலப்பணித் திட்டத்தின் தாரக மந்திரம் ‘நான் அல்ல, நீயே’ என்பதாகும். நாட்டின் இளைஞர்களிடையே தன்னார்வ சமூக சேவை மூலம் ஆளுமையையும் குணத்தையும் வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
- பாலின பிறப்பு விகிதத்தில் நேர்மறையான இலக்கை நாடு எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரிப் பதிவு முறைப்படி, பாலின விகிதம் 18 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
- அதாவது, 2016-18 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 819 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், 2021-23 ஆண்டில் 917 பெண்களாக அதிகரித்துள்ளது.
- 2021 - 23 கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் உள்ளனர். கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிய தடை விதிக்கும் சட்டத்தை வலுப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.
- ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பிறப்பானது வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் அதிக மீள்தன்மையுடையதாகவும் உள்ளது. அதாவது, இயற்கையாகவே ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் உயிர்வாழ்தல் அதிக சாத்தியத்தைக் கொண்டது.
- நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாட்டை 2025 அக்டோபர் 07 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
- பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தி துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடைய வேண்டும் என்ற தேசிய அளவிலான இலக்குடன் பிராந்திய தொழில்துறை கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை இணைக்கும் நோக்கத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தளமாக திகழும்.
- இம்மாநாட்டின் போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அங்கீகாரங்களை வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட புதிய 'பாதுகாப்பு ஏற்றுமதி, இறக்குமதி தளத்தை' பாதுகாப்பு அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.
- அத்துடன் இந்திய பாதுகாப்புத் தளவாடத் தொழில்துறைகளின் திறன்கள் மற்றும் தயாரிப்புகளை வரைபடமாக்கும் டிஜிட்டல் தொகுப்பான ஸ்ரீஜன் டீப் (பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் தளம்) இணையதளத்தையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
- 'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை கொள்கை தொகுப்பு' மற்றும் 'புதுமை கண்டுபிடிப்புகளின் பகிரப்பட்ட பகுதிகள்' என்ற பாதுகாப்பு திறனுக்கான புதுமை கண்டுபிடிப்புகள் (ஐடெக்ஸ்) குறித்த தகவல் கையேடும் இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.
- இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் தங்களுடைய முக்கிய பங்களிப்பு குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளை ஒருங்கிணைப்பதே இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கும், இத்துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் இம்மாநாடு விளக்கும்.
- ஜப்பானில் 248 இடங்களை கொண்ட பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த ஜூலையில் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 125 இடங்கள் தேவை. ஆனால் ஆளும் எல்டிபி கட்சி 122 இடங்களில் வென்றது.
- முன்னதாக கடந்தாண்டு அக்டோபரில் நடந்த பார்லிமென்டின் கீழ்சபை தேர்தலில் எல்.டி.பி., கட்சி பெரும்பான்மையை இழந்திருந்தது. இந்த பின்னடைவுக்கு கட்சி தலைவர் ஷிகெரு இஷிபா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. இதனால் பிரதமராக பதவியேற்று ஓராண்டு முடிவதற்குள் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்தார்.
- கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க 295 எம்பிக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடந்தது. 5 பேர் போட்டியிட்டனர். இதில், முன்னாள் முன்னாள் பொருளாதார பாதுகாப்புத்துறை அமைச்சர், 64 வயதான சனே தகைச்சி வெற்றி பெற்று LDP கட்சியின் தலைவராக தேர்வானார்.
- உட்கட்சி தேர்தலில் சனே 183 வாக்குகளும் கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவராக சனே டகைச்சி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். அவர் ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.