
5th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைக்க ஒப்புதல்
- மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்தில் ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
- இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும். திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 4.95 கோடி ஆகும்.
- நமோ செமிகண்டக்டர் ஆய்வகம் இளைஞர்களுக்கு தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஆழமான திறன் வளத்திற்கு பங்களிக்கும். இந்த ஆய்வகம் ஐஐடி புவனேஸ்வரை செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மையமாக நிலைநிறுத்தும்.
- புதிய ஆய்வகம் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் இந்தியாவில் வடிவமைப்போம் முன்முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும். இது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் செமிகண்டக்டர் சூழலமைப்புக்கு உந்து சக்தியாக செயல்படும்.
- உலகளாவிய சிப் வடிவமைப்பு திறமையில் 20 சதவீதம் இந்தியாவில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 295 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தொழில்துறையால் வழங்கப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வுகளை பயன்படுத்துகின்றனர். 20 நிறுவனங்களிலிருந்து 28 மாணவர்கள் வடிவமைத்த சிப்கள் எஸ்எல்சி மொஹாலியில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
- ஐஐடி புவனேஸ்வர் ஏற்கனவே சிலிக்கான் கார்பைடு ஆராய்ச்சி மற்றும் புதுமை மையத்தை (SiCRIC) கொண்டுள்ளது. நாட்டில் செமிகண்டக்டர் தொழில்துறையை ஆதரிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை இது வழங்கும்.
- அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளின் தரவரிசைப் பட்டியலில் அஸ்ஸாமின் குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா்கள் 3 போ் இடம்பிடித்துள்ளனா்.
- இதில், பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியரும் பிரபல வானிலை ஆய்வாளருமான பூபேந்தா் நாத் கோஸ்வாமி, வேதியியல் துறைப் பேராசிரியா் புரோதீப் புகன், கணிதத் துறைப் பேராசியை பிபன் ஹஜாரிகா ஆகியோா் இடம்பிடித்துள்ளனா்.
- தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிக்கு அா்ப்பணிக்கும் பிரிவின் கீழ், தங்களின் நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்காக இவா்களுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆராயச்சிக் கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான 'ஹெச்' குறியீடு, ஆராய்ச்சி கட்டுரையின் இணை ஆசிரியருக்கான 'ஹெச்எம்' குறியீடு மற்றும் சி-ஸ்கோர் எனப்படும் கூட்டு குறிகாட்டி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலகளவில் 2 சதவீத தலைசிறந்த ஆராய்ச்சியாளா்களின் பட்டியலை தொகுத்து ஆராய்ச்சிக்கு வாழ்நாள் முழுவதையம் அா்ப்பணிக்கும் பிரிவு, ஓராண்டு பங்களிப்புப் பிரிவுகளாக ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
- அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்த மூவரும் இடம்பிடித்து பெருமைப்படுத்தியுள்ளனா். இது நாட்டின் விரிவடைந்து வரும் ஆராய்ச்சி பணிகளை எடுத்துக்காட்டுகிறது.
- மேலும், ஆராய்ச்சியில் ஓராண்டு பங்களிப்பு ஆற்றிய தலைசிறந்த ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் 6,239 ஆராய்ச்சியாளா்களும், நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்காகன பட்டியலில் 3,372 ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.