
2nd OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்
- கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்களில் மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க, தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.
- இந்த உயர்மட்டக் குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் நீதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
- 11 நகரங்களுக்கான நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மை திட்டத்தின் (UFRMP) கட்டம் 2-க்கும் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. போபால், புவனேஸ்வர், குவாஹாட்டி, ஜெய்ப்பூர், கான்பூர், பாட்னா, ராய்ப்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், இந்தூர் மற்றும் லக்னோவுக்கு மொத்தம் ரூ. 2444.42 கோடி தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய அரசு தமது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசுகள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதிக்குஇது பயன்படுத்தப்படுகிறது.
- இந்த நிதியை மாநிலங்கள் தமது வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது.
- இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு. ம.பி., ரூ.7,676 கோடியும் மகாராஷ்டிரா ரூ.6,418 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய வரிப் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு ரூ. 1,01,603 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- மாநில வாரியாக விடுவிக்கப்பட்டுள்ள தொகை வருமாறு ஆந்திரா - ரூ. 4,112 கோடி, அருணாசல பிரதேசம் - ரூ. 1,785 கோடி, அசாம் - ரூ. 3178 கோடி, பீகார் - ரூ. 10219 கோடி, சத்தீஸ்கர் - ரூ. 3462 கோடி, கோவா - ரூ. 392 கோடி, குஜராத் - ரூ. 3534 கோடி, ஹரியானா - ரூ. 11111 கோடி, இமாச்சல பிரதேசம் - ரூ. 843 கோடி, ஜார்க்கண்ட் - ரூ. 3360 கோடி, கர்நாடகா - ரூ. 3705 கோடி, கேரளா - ரூ. 1956 கோடி, மத்திய பிரதேசம் - ரூ. 7976 கோடி, மகாராஷ்டிரா - ரூ. 6418 கோடி, மணிப்பூர் ரூ. 727 கோடி, மேகாலயா - ரூ. 779 கோடி, மிசோரம் - ரூ. 508 கோடி, நாகலாந்து - ரூ. 578 கோடி, ஒடிசா - ரூ. 4601 கோடி, பஞ்சாப் - ரூ. 1836 கோடி, ராஜஸ்தான் - ரூ. 6123 கோடி, சிக்கிம் - ரூ. 394 கோடி, தமிழ்நாடு - ரூ. 4144 கோடி, தெலங்கானா - ரூ. 2136 கோடி, திரிபுரா - ரூ. 719 கோடி, உத்தரப் பிரதேசம் - ரூ. 18,227 கோடி, உத்தரகாண்ட் - ரூ. 1136 கோடி, மேற்கு வங்கம் - ரூ. 7644 கோடி