
25th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் "A Sun from the south"(தெற்கிலிருந்து ஒரு சூரியன்) நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
- முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக். 24) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் “A Sun from the south” என்னும் நூலினை வெளியிட்டார்.
- இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின்கீழ், கே.எஸ்.எல். மீடியா-வுடன் இணைந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.
- “A Sun from the South” என்னும் இந்நூல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆளுமையை திராவிட இயக்கத்தோடு இணைத்துக் காணும் அதே வேளையில் இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை தெற்கிலிருந்து ஆராய ஊக்கமும் உற்சாகமும் தரும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளது.
- “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” என்னும் பெயரில் முன்னர் வெளிவந்த தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான இது, மூலநூலைப் படிக்கும் அதே விறுவிறுப்போடு வாசகர்களைக் கவரும் விதமாகக் கூடுதல் கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது.
- கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சிஎஸ்எல்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மாஹே என்ற எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் முதலாவது கப்பல் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மாஹேவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
- கப்பல் கட்டுமானத்தில் அதிகரித்து வரும் இந்தியாவின் தற்சார்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த போர்க்கப்பல் சிஎஸ்எல் நிறுவனத்தால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.
- இது நீருக்கடியில் கண்காணிப்பு, குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தோராயமாக 78 மீட்டர் ஆழத்தில், சுமார் 1,100 டன் இடப்பெயர்வுடன், டார்பிடோக்கள், பல்வேறு செயல்பாடுகளுடன் கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட ரேடார்கள் மற்றும் சோனார்கள் மூலம் நீருக்கடியில் போரில் சிறப்பாகச் செயல்படுகிறது.
- நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையின் திறனை கணிசமாக அதிகரிப்பதுடன், கடலோரப் பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும்.
- 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள ‘மாஹே’ போர்க்கப்பல், தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை உறுதிப்படுத்துகிறது.

 
 
