
குஜராத் மற்றும் ஹரியானாவில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த ரூ. 730 கோடிக்கும் அதிகமான 15-வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது
- குஜராத் மற்றும் ஹரியானாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக 2025–26 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- குஜராத்தில், 2024–25 நிதியாண்டிற்கான 2-வது தவணையாக ரூ. 522.20 கோடி மதிப்புள்ள அனைத்துப் பயன்பாட்டுக்கான மானியங்கள் 38 மாவட்ட பஞ்சாயத்துகள், 247 தகுதியான வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் 14,547 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
- மேலும், 2024–25 நிதியாண்டில் அனைத்துப் பயன்பாட்டுக்கான மானியங்களின் முதல் தவணையில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியான ரூ. 13.5989 கோடி தகுதியான 6 மாவட்ட பஞ்சாயத்துகள், 5 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் 78 கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதலாக விடுவிக்கப்பட்டுள்ளது.
- ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு 2025–26 நிதியாண்டிற்கான முதல் தவணையாக ரூ. 195.129 கோடி மதிப்பிலான அனைத்துப் பயன்பாட்டுக்கான மானியங்களை விடுவித்துள்ளது. இது 18 மாவட்ட பஞ்சாயத்துகள், 134 தகுதியான வட்டாரப் பஞ்சாயத்துகள், 6,164 கிராம பஞ்சாயத்துகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவர் நேற்று (அக். 20) சந்தித்தார்.
- இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.75 ஆயிரம் கோடி) மதிப்பிலான அரிய கனிம வள ஒப்பந்தத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் அல்பானீஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த 6 மாதங்களுக்கு அரிய கனிம சுரங்கங்கள் மற்றும் அதன் செயலாக்கத் திட்டங்களுக்கு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் தலா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
- முன்னதாக, அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், மாற்று வழியாக இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- மேலும், சீன அரசின் நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது கூடுதலாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
