
16th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சித்த மருத்துவ பல்கலை. மசோதா குறித்த ஆளுநரின் கருத்து நிராகரிப்பு - பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
- சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அறிமுகம் செய்தார்.
- சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதியளித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியது: 'தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால், இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநர் பரிந்துரை பெறப்பட வேண்டும்.
- பொதுமக்கள் கருத்து அறிந்து, கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சுகாதாரத் துறையால் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, சுகாதாரத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் சரிபார்க்கப்பட்டு, சட்ட முன்வடிவின் பிரதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
- ஆனால், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படியான வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும்போது, பேரவை உறுப்பினர்களுடைய கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்துக்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.
- ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.
- இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.
- இந்தப் பேரவை சட்டமுன்வடிவுகளை 'பொருத்தமற்ற முறையில்' அல்லது 'தகுந்த முறையில் அல்லாமல்' ஆய்வு செய்யும் தொனியில், 'பொருத்தமான' அல்லது 'தகுந்த' எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை ஆளுநர் குறிப்பிட்டிருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
- சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக்குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை.
- எனவே, '2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது' என்னும் தீர்மானத்தை மொழிகிறேன்.
- மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார்.
- இதையடுத்து பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்றார். ஜோதிர்லிங்கமும், சக்தி பீடமும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். அங்கு சென்று பிரதமர் மோடி ருத்ராபிஷேக பூஜை செய்து வழிபட்டார். அவருடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இதன் பிறகு சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அதனை தொடர்ந்து கர்னூல் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் ரூ.13,340 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- இதன்படி தொழில்துறை, மின்சாரம், சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
- குறிப்பாக கர்னூல்-III துணை மின் நிலையத்தில் ரூ.2,880 கோடி முதலீட்டில் மின்பகிர்மான அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- அதே போல், ரூ.4,920 கோடி முதலீட்டில் கர்னூலில் ஓர்வக்கல் தொழிற்பேட்டை மற்றும் கடப்பாவில் கொப்பர்த்தி தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
- அதைத் தொடர்ந்து, ரூ.960 கோடி செலவில் சப்பாவரம்-ஷீலாநகர் வரையிலான 6 வழி பசுமை நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம், ரூ.360 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணா மாவட்டத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம், ரூ.1,730 கோடி செலவில் கெயில் இந்தியா லிமிடெட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாகுளம்-அங்குல் இயற்கை எரிவாயு குழாய் பாதை மற்றும் ரூ.1,200 கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
- அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா 7 போட்டிகளில் விளையாடி 314 ரன்கள் குவித்தார். இதில் மூன்று 3 அரைசதங்களும் அடக்கம். இதனை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அபிஷேக் ஷர்மா ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அதே போல், ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்திய மகளீர் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 2025-க்கான சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான விருதை அறிவித்துள்ளது. அதன்படி, மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் ராகுல் சச்தேவ் விருது பெறுகிறார்.