
12th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2025) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், 53 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார்.
- கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டர் கட்டடப் பரப்பளவில் 53 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் (G+2) மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் கட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.