
11th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்
- தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராம மக்களிடம் உரையாற்றினார்.
- அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.
- கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டின் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்து பணிகளை மேற்கொள்ள கிராம சபையின் ஒப்புதல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டன.
- தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை உலகத்தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாகவும், தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு பன்னாட்டு இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக புத்தொழில் மாநாடு கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் துவங்கியது.
- இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று இரண்டாவது நாளாக இம்மாநாடு நடந்து, மாலையுடன் நிறைவடைந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
- இம்மாநாட்டில், பிரான்சின் லிங்க் இன்னோவேசன்ஸ், பிலிப்பைன்ஸின் டெக் ஷேக், ஜெர்மனியின் ஆசிய பெர்லின் போரும், தென்கொரியாவின் யூனிகார்ன் இன்குபேட்டர், கனடாவின் ஆர்.எக்ஸ்.என். ஹப், ப்ளு ஓசன் மற்றும் லோவ்ஸ் இந்தியா உள்ளிட்ட 23 பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.
- மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் ரூ.130 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2025) புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
- பிரதமர் விவசாயத் துறையில் ₹35,440 கோடி செலவிலான இரண்டு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ₹24,000 கோடி செலவில் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தை (தன் தான்ய கிரிஷி) அவர் தொடங்கி வைத்தார்.
- ₹11,440 கோடி செலவில் செல்படுத்தப்படும் பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
- விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தும் துறைகளில் ₹ 5,450 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- அதே நேரத்தில் சுமார் ₹ 815 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.