Type Here to Get Search Results !

9th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

9th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

  • இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த 2025 ஜூலை 21ஆம் தேதி உடல் நலக் குறைவை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
  • நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற துணை குடியரசுத் தலைவருக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 
  • இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இந்த உயரிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார். 
  • சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 12 பேர் தேர்தலை புறக்கணித்த நிலையில் மொத்தமாக்ல 767 வாக்குகள் பதிவாகியிருந்தது.

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் மற்றும் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜினாமா

  • நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடேலும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 
  • போராட்டக்காரர்களின் வலியுறுத்தல் காரணமாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அதிபரும் ராஜினாமா செய்துள்ளார்.
  • போராட்டத்தைத் தடுக்கவே, அந்நாட்டு அரசு சமூக ஊடகங்களை தடை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். 
  • அந்நாட்டின் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 
  • தானேயில் உள்ள சூரியதீப்தா பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வெடிப் பொருட்கள், டார்பெடோ மற்றும் ஏவுகணையை கொண்ட 11-வது கடற்படை கப்பலான எல்எஸ்ஏஎம்-25 (தளம் 135)-ன் வெள்ளோட்ட நிகழ்வு 2025 செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரியர் அட்மிரல் விஷால் பிஷ்னோய் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
  • வெடிப் பொருட்கள், டார்பெடோ மற்றும் ஏவுகணையை கொண்ட 11 கடற்படை கப்பல்களை கட்டமைக்கும் ஒப்பந்தம் எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் தளமான சூரியதீப்தா பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 2021 மார்ச் 05 அன்று இறுதிசெய்யப்பட்டது. 
  • இந்த கடற்படை கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான இந்தியப் பதிவகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன. 
  • இவை கடல் தகுதிக்கு பொருத்தமானவையா என்பதை சோதிக்க  விசாகப்பட்டனத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தால் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
  • ஏற்கனவே இந்த கப்பல் கட்டும் தளம் வெற்றிகரமாக 10 கடற்படை கப்பல்களை வழங்கியுள்ளது. இவை செயல்பாட்டு மேம்பாடுகளுக்காக இந்திய கப்பற்படையால் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்தக் கப்பற்படை கப்பல்கள் மத்திய அரசின் மேக்-இன்- இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளின் பெருமைமிகு முன்னோடிகளாக விளங்குகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel