
8th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025 - மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன்
- கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்காவும், அமெரிக்க வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் 8-ம் நிலையில் இருப்பவருமான அமண்டா அனிசிமோவாவும் மோதினர்.
- இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்தது. தொடர்ந்து 2வது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை அவர் வென்றார்.
- இதன்மூலம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ச்சியாக வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- 27 வயதான பெலாரஸ் வீராங்கனை சபலென்கா கைப்பற்றியுள்ள 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அவர் யுஎஸ் ஓபன் பட்டத்தை 2 முறையும் (2024, 2025), ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2 முறையும் (2023, 2024) வென்றுள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையில் அல்காரஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில், அல்காரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தினார்.
- இந்தத் தொடரில், அல்காரஸ் இழந்த ஒரே ஒரு செட் இந்த இறுதிப் போட்டியில்தான். இது அல்காரஸின் இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டம் மற்றும் ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
- 12 வது ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கீர் ஸ்டேடியத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
- நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தாமதமாக நடத்தப்பட்டது. இதில் தென்கொரியா அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
- இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, தென் கொரியா, மலேசியா, சீனா, ஜப்பான், வங்கதேசம், கஜகஸ்தான் மற்றும் சீன தைபே ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
- இந்த நிலையில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி நடந்தது. இந்திய அணி ஆரம்பம் முதலில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தென்கொரியா அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது.
- ஆட்ட நேர இறுதியில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தில்பிரித் ஆட்டநாயகன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்திய அணி ஏற்கனவே 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பையை நான்காவது முறையாக வென்றுள்ளது.
- அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் தென்கொரியாவுக்கு அடுத்ததாக அதிக முறை ஆசிய கோப்பையை வென்ற 2வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.