Type Here to Get Search Results !

56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் / 56th GST COUNCIL MEETING

  • 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் / 56th GST COUNCIL MEETING: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
  • 5, 12, 18, 28% என 4 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி வரி விகிதம் 5, 18% என 2 அடுக்குகளாக குறைக்க ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து அப்படியே 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மருத்துவ காப்பீடுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
  • அதாவது, இந்த துறையில் தனிப்பட்ட மருத்துவ காப்பீடுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. முன்னர் இதற்கு 18% வரை வரி இருந்தது. அதேபோல தெர்மோமீட்டர், மருத்துவ தர ஆக்ஸிஜன், அனைத்து நோயறிதல் கருவிகள் & வினையூக்கிகள், குளுக்கோமீட்டர் & சோதனை கருவிகள், பார்வை திறன் கண்ணாடிகள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 12% ஜிஎஸ்டி இருந்தது. இந்த முறை 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
  • மற்ற பொருட்களை பொறுத்தவரை, தேங்காய் எண்ணெய், சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், மேஜைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், நூடுல்ஸ், பாஸ்தா, உணவுப் பொருட்கள், ரொட்டிகள், சைக்கிள்கள், பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியற்றுக்கு 12 மற்றும் 18 சவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • அதேபோல வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட நாப்கீன்கள், மிக்சர், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவளிக்கும் பாட்டில்கள், டயப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் ஆகியவற்றுக்கும் 12 மற்றும் 18 சதவிகிதத்திலிருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.
  • முன்னதாக சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்றும், அது மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாட உபயோகப் பொருள்கள்

  • பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.
  • சோப், ஷாம்பு, பற்பசை போன்ற பொருள்கள் மீது 5% மட்டுமே வரி வசூலிக்கப்படும்.
  • வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • நொறுக்குத் தீனிகள் மீது 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

  • வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீதத்திலிருந்து 18% ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிதத்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • டிராக்டர், அதன் டயர் மற்றும் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கு இனி 18% வரி வசூலிக்கப்படும்.
  • சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி வரியை எந்தவகையில் குறைக்கலாம் என்பது குறித்து கடந்த 9 மாதங்களாக பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

கல்வித் துறை

  • கல்வித் துறையில் மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் விலக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை

  • தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
  • தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது

ENGLISH

  • 56th GST COUNCIL MEETING: The 56th Goods and Services Tax (GST) Council meeting was held today under the chairmanship of Union Finance Minister Nirmala Sitharaman.
  • The GST Council meeting headed by Union Finance Minister Nirmala Sitharaman has approved the reduction of the GST tax rate from 5, 12, 18, 28% to 5, 18%.
  • In this, the GST tax on many essential goods has been reduced from 18% to 5%. Especially educational goods have been exempted from GST tax. Similarly, medical insurance has also been exempted from GST tax.
  • That is, there is no GST tax on personal medical insurance in this sector. Earlier, there was a tax of up to 18%. Similarly, thermometers, medical grade oxygen, all diagnostic equipment & catalysts, glucometers & testing equipment, vision glasses, etc., which were earlier 12% GST. This time it has been reduced to 5%.
  • As for other items, GST has been reduced from 12 and 18 percent to 5% on coconut oil, soaps, shampoos, toothpaste, tableware, kitchenware, noodles, pasta, food items, breads, bicycles, many medicines and tablets, medical equipment, and agricultural equipment.
  • Similarly, GST has been reduced from 12 and 18 percent to 5% on butter, ghee, cheese, dairy products, pre-packaged napkins, mixers, utensils, baby feeding bottles, diapers, sewing machines and their parts.
  • It is noteworthy that Prime Minister Narendra Modi, in his address to the nation on Independence Day, had said that GST rates would be reduced and that it would be a Diwali gift to the people.

Daily necessities

  • There is no GST on food items like milk, bread, chapati.
  • Only 5% tax will be levied on items like soap, shampoo, toothpaste.
  • GST on butter, ghee and dairy products has been reduced from 12% to 5%.
  • GST on snacks, which was 12%, has been reduced to 5%.
  • Milk bottles, napkins and medical diapers for babies have been reduced from 12% to 5%.
  • GST on sewing machines and their spare parts has been reduced from 12% to 5%.

Electronics and home appliances

  • Tax on ACs, TVs and cars used in homes has been reduced from 28% to 18%.
  • GST on autos, two-wheelers and goods vehicles has been reduced from 28% to 18%.
  • GST on tractors, their tyres and spare parts has been reduced to 5%.
  • All motor vehicle parts will now be charged 18% tax.
  • Cigarettes, pan masala and soft drinks have been taxed at 40%.
  • Prime Minister Modi has been advising on how to reduce GST for the last 9 months.

Education Sector

  • GST on stationery, maps, notes, rubber, pencils, crayons, etc. required by students in the education sector has been completely exempted.

Health Sector

  • GST on personal health and life insurance has been completely eliminated.
  • GST on thermometers, medical oxygen, test kits and glasses has been reduced from 12% to 5%.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel