
4th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அத்தியாவசிய கனிமங்களின் மறுசுழற்சிக்கு ரூ. 1500 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இரண்டாம் நிலை ஆதாரங்களில் இருந்து அத்தியாவசிய கனிமங்களை பிரித்தெடுத்து உற்பத்தி செய்வதற்காக நாட்டின் மறுசுழற்சி திறனை ஊக்குவிக்க 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தேசிய அத்தியாவசிய கனிமங்கள் இயக்கத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், முக்கியமான கனிமங்களில் உள்நாட்டு திறனையும் விநியோகச் சங்கிலி நெகிழ்தன்மையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலநிலை நிதியாண்டு 2025-26 முதல் நிதியாண்டு 2030-31 வரையிலான ஆறு ஆண்டுகளாகும். இந்தத் திட்டம், அத்தியாவசிய கனிமங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபடும் மறுசுழற்சி மதிப்புச் சங்கிலிக்கு ஊக்கத்தொகையை வழங்கும்.
- திட்டத்திற்கான ஊக்கத்தொகைகள் ஆண்டுக்கு குறைந்தது 270 கிலோ டன் மறுசுழற்சி திறனை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 கிலோ டன் முக்கிய கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும்.
- இந்தத் திட்டம் சுமார் 8,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்றும், 70,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சுகாதார பராமரிப்பில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு தொழில், வர்த்தக மேம்பாட்டு துறையான டிபிஐஐடி, ஃபைசர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தம் மருந்து துறையில் புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு, நிதி சாராத ஆதரவு என இரண்டையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- மருந்து துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி சாராத ஆதரவானது ஆய்வகங்களில் இருந்து சந்தைக்கான பயணத்தை விரைவுபடுத்தும்.
- டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா 60 லட்ச ரூபாய் உதவி வழங்கப்படுவதுடன் 18 மாத தொழில் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
- மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடியும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
- புத்தொழில் நிறுவனங்களுக்கும், புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ஆதரவளிக்கும்.
- ஸ்டார்ட் அப் இந்தியா இணைய தளத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கான பயிலரங்குகள் நடத்தப்படுவதுடன் சந்தைப் படுத்துதல் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

 
 
