
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள்
- தமிழ் நாட்டில் சங்ககாலத்தைச் சார்ந்த கோட்டை ஒன்றின் எச்சங்களை இன்றும் நாம் காணக் கிடைக்கும் இடம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகும்.
- தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை சார்பில் அங்கே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.
- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் "மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.
- இந்த தொகையை சுயதொழில் தொடங்கவும், அல்லது பிற வாழ்வாதார தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், தொழில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி, சந்தை வழிகாட்டுதல், அடுத்த கட்டத்தில் ரூ.2 லட்சம் வரை மானிய உதவியும் வழங்கப்படும்.
- ரூ.7,500 கோடி செலவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், பீகார் பெண்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெண்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த நிதியை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல், நெசவு, பிற சிறு தொழில்கள் உட்பட தாங்கள் விரும்பும் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- பெண்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் மாநில அரசின் முயற்சியின் ஒரு அங்கமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படையில் முக்கிய, பல போர்களின் நாயகனாக விளங்கிய MiG-21 ரக போர் விமானங்கள், 62 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றன.
- நாட்டின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானம் என்ற பெருமைக்குரிய இந்த விமானங்களுக்கு, சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பிரமாண்டமான பிரியாவிடை விழா நடைபெறுகிறது.
- இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
- இந்த விழாவின் முக்கிய அம்சமாக விமானங்கள் இணைந்து கண்கவர் விமான அணிவகுப்பு நடத்தப்பட்டது. 2019 வான்வழித் தாக்குதலை நினைவுகூரும் வகையில், MiG-21 மற்றும் ஜாகுவார் விமானங்களுக்கு இடையே ஒரு மாதிரி வான்வழி சண்டையும் நடத்தப்பட்டது.

 
 
