
25th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- அடுத்த 12 மாதங்களில் இந்தப் பணி நிறைவடையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிஎன்ஜிக்கு வாகனங்களை மாற்றியமைப்பதற்கான துறையில் எக்கோ ஃப்யூயலின் முன்னணி உறுதியாகியுள்ளது.
- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து 97 இலகு ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- இந்திய விமானப் படைக்காக 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான 68 எம் கே 1 ஏ ரக போர் விமானங்கள் மற்றும் 29 இரண்டு இருக்கைகள் கொண்ட போர் விமானங்கள் இதில் அடங்கும்.
- இதற்கான ஒப்பந்தம் இம்மாதம் 25-ம் தேதி கையெழுத்தானது. இந்த இலகு ரக போர் விமானங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 2027-28-ம் ஆண்டில் தொடங்கும் என்றும் அனைத்து போர் விமானங்களையும் 6 ஆண்டுக் காலத்திற்குள் விமானப்படையிடம் ஒப்படைக்கும் பணி நிறைவடையும் என்று அந்த அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
- இந்த போர் விமானங்களில் 64 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது என்றும் 67 கூடுதல் பாகங்களுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
- இந்த போர் விமானங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள், ரேடார் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை தற்சார்பு இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
- இந்தத் திட்டத்தில் 105-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதுடன் ஆண்டு ஒன்றுக்கு 11,750 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவுகணைகள், கடந்த 2011 முதல் பயன்பாட்டில் இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த தலைமுறை ஏவுகணைகளை டிஆர்டிஓ வடிவமைத்து வருகின்றது.
- இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளில் அக்னி – பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவு வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
- இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி – பிரைம் ஏவுகணையை முதல்முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் வைத்து, நேற்றிரவு ஏவி சோதனை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.
- இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
- மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், முதுநிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5,000 முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கவும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,023 இளநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பதற்குமான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் 3-ம் கட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த 2 திட்டங்களுக்காக 2025-26-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு ரூ.15,034.50 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.10,303.20 கோடியாகவும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.4,731.30 கோடியாகவும் இருக்கும்.
- இதன் மூலம் நாட்டில் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்களுடைய பங்களிப்பு மூலம் சுகாதார தரம் மேம்பட வாய்ப்புள்ளது.
- குறிப்பாக கடைகோடி பகுதிகள் இதனால் பயன்பெறும். இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் கற்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படுதல், உலகளாவிய தரத்திற்கு இணையாக மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல், போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மூலம் இந்தியாவை சுகாதார சேவைக்கான சிறந்த இடமாக திகழச் செய்து அந்நியச் செலாவணியை ஈட்டுதல் உள்ளிட்ட பயன்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக்குழுவின் சுழற்சிக்காலத்தில் ரூ. 2277.397 கோடி ஒதுக்கீட்டுடன் திறன் கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தேசிய சோதனைக் கூடங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
- இந்த முன்முயற்சி பல்கலைக்கழகங்கள், தொழில்துறை தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி செய்ய விரும்பும் ஆர்வமுள்ள இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான தளத்தை வழங்கும்.
- பிரபல விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களால் வழிகாட்டப்படும் இந்தத் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கணித அறிவியல் ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்கும்.
- பீகாரில் ரூ.3,822.31 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை – 139 டபிள்யூ-வின் சாஹேப்கஞ்ச் – அரேராஜ் – பெட்டியா பிரிவில் 78.942 கிலோமீட்டர் தொலைவிற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நான்கு வழிச்சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நான்கு வழிச்சாலை பசுமை வழித்திட்டம் மாநில தலைநகர் பாட்னா வடக்கு பீகார் மாவட்டங்களான வைசாலி, சரண், சிவான், கோபால்கஞ்ச், முசாஃபர்பூர், கிழக்கு சம்பரன் மற்றும் மேற்கு சம்பரன் மாவடங்களை இந்தியா - நேபாள எல்லைப் பகுதி வரை இணைக்கும் பெட்டியா இடையே போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமாகும்.
- இத்திட்டம் நீண்ட தூர சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும். வேளாண் மண்டலங்கள், தொழில்துறை பகுதிகள், எல்லைப்பகுதி வர்த்தக வழித்தடங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் முக்கிய உள்கட்டமைப்பை அணுகுவதையும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் உதவிடும்.
- இத்திட்டம் 14.22 லட்சம் மனித வேலை நாட்களுக்கான வேலைவாய்ப்பையும் 17.69 லட்சம் மனித வேலை நாட்களுக்கான மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

 
 
