2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது / KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023
TNPSCSHOUTERSSeptember 24, 2025
0
2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது / KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருதுப் பட்டயம் வழங்கப்படும்.
கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது: பாரதியார் விருது (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸுக்கும், பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலை நிறுவனம் மறும் நாடகக் குழுவுக்கான விருதுகள்: சிறந்த கலை நிறுவனத்துக்கான விருதுக்கு, தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நாடகக் குழுவுக்கான விருதுக்கு, கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம் ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2021-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்
அழகன் தமிழ்மணி - சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
ஏ.ஆர்.ஏ. கண்ணன் - இசை நாடக நடிகர்
ஆர்.எம். தமிழ்ச்செல்வி - இசை நாடக நடிகை
கே.எம்.ராமநாதன் - தெருக்கூத்து
டி.ஜெகநாதன் - வில்லுப்பாட்டு
சி.மகாமணி - நையாண்டிமேள தவில்
ஆ.சந்திரபுஷ்பம் - கிராமியப் பாடல் ஆய்வாளர்
சு.தீனதயாளன் - சிற்பி
ENGLISH
KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023: The Tamil Nadu Government has announced the Kalaimamani Award to be presented by the Tamil Nadu Arts, Music and Drama Council.
This award is given in recognition of the contribution of artists who have served the arts, music and drama for many years. Accordingly, the Tamil Nadu Government has announced the Kalaimamani Award for three years, 2021, 2022 and 2023.
It has also been reported that Chief Minister M.K. Stalin will present these awards at a function to be held at the Kalaivanar Arangam in Chennai next month. The winners of this All India Award will be given a cheque for a prize money of one lakh rupees and a gold medal weighing 3 sovereigns. The artists who receive the Kalaimamani Award will be given a gold medal weighing 3 sovereigns and an award certificate.
MS Subbulakshmi Award for K.J. Yesudas: Bharathiyar Award (Science) to Dr. N. Murugesa Pandian, MS Subbulakshmi Award (Music) Padma Bhushan to Dr. K.J. Yesudas, and Balasarasuwathi Award (Drama) to Padma Shri Muthukannammal have been announced.
Awards for Best Art Institution and Drama Group: Tamil Music Society, Chennai (Raja Annamalai Mandram) has been selected for the Best Art Institution award. Kalaimamani MR Muthusamy Memorial Drama Group, Palamedu, Madurai District has been selected for the Best Drama Group award.
List of artists who will receive the Kalaimamani Award for 2021
K. Thirunavukkarasu - Writer
Poet Nellai Jayantha - Lyrical poet
S. Chandrasekhar (A) Thangampattar - Religious orator
Papanasam Ashok Ramani - Vocal music
P. Satgurunathan - Orator Thirumuraidevar music
D.A.S. Thakkesi - Tamil music singer
Thrissur C. Narendran - Mridangam
N. Narasimhan - Kottu Vathyam
Go. Billappan - Nathasura teacher
Thirukattupalli D.J. Subramanian - Nathasuram
Kalyanapuram G. Srinivasan - Nathasuram
Thiruvallikeni K. Sekar - Thavil
Natyam Vazhuvur S. Palaniappan - Bharatanatyam teacher