
19th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஐந்தாவது ஆய்வுக் கூட்டம்
- சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (செப்.19) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே நமது முக்கிய நோக்கமாகும். ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதமாக குழந்தைகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர்.
- இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15.11.2024 இல் துவங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 0-6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
- விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் முறையே 0.77 மற்றும் 1.01 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1.07 மற்றும் 1.26 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு ஆகஸ்ட் 2025ல் 1.03 புள்ளிகள் அதிகரித்து 136.34 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு 0.94 புள்ளிகள் அதிகரித்து 136.60 ஆக உயர்ந்துள்ளது.
- ஆகஸ்ட் 2025ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு உணவு குறியீடு 1.39 புள்ளிகளும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு 1.29 புள்ளிகளும் அதிகரித்துள்ளது.
- ஆகஸ்ட் 2025ல் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் முறையே 1.07 முதல் 1.26 சதவிகிதமாகவும் இருந்தது.
- ஆகஸ்ட் 2025ல் உணவுப் பணவீக்கம் (-) 0.55 சதவிகிதமாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு (-) 0.28 சதவிகிதமாகவும் இருந்தது.

 
 
