Type Here to Get Search Results !

14th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அசாமின் தர்ராங்கில் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • அசாமின் தர்ராங்கில் சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 
  • நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஸ்ஸாமின் வளர்ச்சிப் பயணத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தர்ராங் மக்களுக்கும், அனைத்து அஸ்ஸாம் குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  • அஸ்ஸாமின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்திய பிரதமர், இதை அடைய, ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்று கூறினார்.  வடகிழக்கு பகுதியை வளர்ச்சியடைந்த இந்தியாவின் உந்து சக்தியாக அஸ்ஸாம் மாற்றும் என்று கூறி தமது உரையை அவர் நிறைவு செய்தார்.
  • அஸ்ஸாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீனம் தனி நாடாக ஐநா  தீர்மானம் இந்தியா ஆதரவு 
  • பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் 'நியூயார்க் அறிக்கை' தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது.
  • பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது. அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா, ஹங்கேரி உள்ளிட்ட 10 நாடுகள் இதனை எதிர்த்துள்ளன, மேலும் 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.
  • இந்தத் தீர்மானம், ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ்-சவூதி அரேபியா இணைந்து நடத்திய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 - தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா
  • இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்.
  • இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் ஜாஸ்மின் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற 9-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 
  • இதற்கு முன்னர் மேரி கோம், நிகத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா, நீது, லவ்லினா, சாவிட்டி ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel