
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்
- தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
- சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் திட்டத்தை தொடக்கிவைத்த முதல்வர், பரிசோதனைக்கு வருகை தந்திருக்கும் மக்களிடம் உரையாடினார்.
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
- சென்னையில் 15 மண்டலங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது.
- முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலைக்குள் வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும். சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
- முகாமில் பெயா் பதிவு செய்பவா், பிற்காலங்களில் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும், அவரது உடல்நல விவரங்களைக் கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
- நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயா்சிறப்பு மருத்துவ நிபுணா்களும், 5 வகையான இந்திய மருத்துவ முறை நிபுணா்களும் இடம் பெறுவா்.
- மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை தலைமைச் செயலகத்தில், கடந்த 3ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன் விருதுகளை காண்பித்து வாழ்த்துப்பெற்றர். மேலும் கள்ளக்குறிச்சி - 2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் லாப பங்கீட்டு ஈவுத்தொகையாக ரூ.22.60 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்.
- கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
- கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்த நிலையிலிருந்து மீண்டு வருகின்றன.
- கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையைவிட 7.5 சதவீதம் அதிகம். கடந்த மாதம் வசூல் ரூ.1.84 லட்சம் கோடி ஆகும்.
- இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மொத்த உள்நாட்டு வருவாய் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியாகவும், இறக்குமதி வரி 9.5 சதவீதம் அதிகரித்து ரூ.52,712 கோடியாகவும் உள்ளது.
- ஜிஎஸ்டி ரீபண்ட் ஆண்டுக்கு ஆண்டு 66.8 சதவீதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை 2025 ல் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஜூலையில் 57.7-ஆக இந்தது. ஆனால், ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்த பிஎம்ஐ, செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது.
- கடந்த அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5-ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது.
- பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது.
- அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது. பின்னா் அது ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4-ஆக அதிகரித்தது.
- இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஜூலை மாதத்தில் 59.1-ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த 16 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.
- இதன்மூலம், தொடா்ந்து 49-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.
- கடந்த ஜூலை மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், துறைக்கு சாதகமான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ 16 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.