
29th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தீ ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
- தீ ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறும் நிலையில், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
- சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் சோ்ந்தவர்.
- மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால் டிஜிபியாக பணி ஓய்வு பெறுகிறார்.
- சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்தவர். இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.
- பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- 12வது இந்தியா- ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் அறிக்கையை அதன் இணைத் தலைவர்கள் இரு தலைவர்களுக்கும் வழங்கினர்.
- இந்திய மற்றும் ஜப்பானிய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மைகளை எடுத்துரைத்த ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. நோரிஹிகோ இஷிகுரோ, எஃகு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, கல்வி மற்றும் திறன்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் மனிதவள பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட பல்வேறு பி2பி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அறிவித்தார்.
- நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது விவசாயத் துறையின் ஏற்பட்ட செயல்திறனே என்றது தரவு.
- அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 சதவிகிதமாக இருந்ததால், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இருந்தது.
- இந்நிலையில், முந்தைய அதிகபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024 ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் இது 8.4 சதவிகிதமாக இருந்தது.
- இன்று வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவர அலுவலகம் தரவுகளின்படி, 2024-25ல் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் விவசாயத் துறை 1.5 சதவிகிதத்திலிருந்து 3.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- இருப்பினும், உற்பத்தித் துறை வளர்ச்சியானது 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே அதன் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது 7.6 சதவிகிதமாக இருந்தது.
- இந்த மாத தொடக்கத்தில், ரிசர்வ் வங்கியானது 2025-26 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.5 சதவிகிதமாகக் கணித்திருந்தது.
- இது முதல் காலாண்டு 6.5 சதவிகிதமாகவும், இரண்டாவது காலாண்டு 6.7 சதவிகிதமாகவும், மூன்றாவது காலாண்டு 6.6 சதவிகிதமாகவும், நான்காவது காலாண்டு 6.3 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கணித்திருந்தது.
- கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவிக்காலம் முடிவடைய ஆறு மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் படேலை அரசாங்கம் நியமித்துள்ளது.
- பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான டாக்டர் உர்ஜித் படேலை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் (ED) பதவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தப் பதவியை பொறுப்பேற்ற தேதியிலிருந்து அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை இது அமலுக்கு வரும்' என்று ஆகஸ்ட் 28 தேதியிட்ட அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 4, 2016 முதல் டிசம்பர் 11, 2018 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராகப் பணியாற்றிய உர்ஜித் படேல், நிதி அமைச்சகத்தின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பதவியை நிரப்புவார்.
- கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் புதிய புத்தகத்தின் விளம்பரம் தொடர்பான "முறைகேடு" காரணமாக அவரது பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
- ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜுலியன் வெபர் தன்னுடைய ஆறு வாய்ப்புகளில் இரண்டு முறை 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி எறிந்து அசத்தினார். அதில் அதிகபட்சமாக 91.51மீட்டருக்கு எறிந்திருந்தார்.
- இரண்டு முறை டைமண்ட் லீக்கில் ரன்னர் -அப்பாகி இருந்த ஜுலியன் வெபர் தற்போது முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளார்.
- நீரஜ் சோப்ரா 85.01 மீட்டருக்கு எறிந்து இரண்டாமிடம் பிடித்தார். அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.