
28th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜூலை மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 3.5% வளர்ச்சி
- தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடு இப்போது ஒவ்வொரு மாதமும் 28 ஆம் தேதி (அல்லது 28 ஆம் தேதி விடுமுறை என்றால் அடுத்த வேலை நாளில்) வெளியிடப்படும்.
- இந்தக் குறியீடு மூல நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகிறது. திருத்தக் கொள்கையின்படி இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தத்திற்கு உட்படும்.
- ஜூலை 2025 க்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகும். இது ஜூன் 2025 இல் 1.5 சதவீதமாக இருந்தது .
- ஜூலை 2025 க்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-) 7.2 சதவீதம், 5.4 சதவீதம் மற்றும் 0.6 சதவீதம் ஆகும்.
- ஜூலை 2024 இல் 149.8 ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் தற்போது 155.0 ஆக உள்ளது. ஜூலை 2025 மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 107.7, 156.9 மற்றும் 221.5 ஆக உள்ளன.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. பளுதூக்குதல் 71 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அஜித் நாராயணா (26), ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தமாக, 317 கிலோ பளுதூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
- நைஜீரியா வீரர் ஜோசப் எடிடியோங் உமோஃபியா, 316 கிலோ பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகளிருக்கான, 63 கிலோ எடைப் பிரிவில் நடந்த, ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் போட்டியில், இந்திய வீராங்கனை நிருபமா (24), மொத்தமாக, 217 பளுதூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இப்போட்டியில் கனடா வீராங்கனை மாவ்ட் சாரோன் தங்கம் வென்றார்.
- மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபூல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இவர்களில் பஞ்சோலியின் நியமனத்துக்கு கொலிஜியம் உறுப்பினரான நீதிபதிகள் நாகரத்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு நீதிபதிகளும் பதவியேற்ற பின்னர் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளை கொண்டு முழு பலத்துடன் உச்சநீதிமன்றம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.