
26th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
- இதில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்தினர்.
- சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தமிழ்நாட்டின் உயிரியல் பல்வகை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரின் உயிரியல் பல்வகை குறியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- இது தமிழ்நாட்டின் முதலாவது நகர உயிரியல் பல்வகை குறியீடு, உயிரியல் பல்வகையை நகர திட்டமிடலில் ஒருங்கிணைக்கும் வழிகாட்டி, பசுமை விரிப்பை விரிவுபடுத்தும் திட்டங்கள், கார்பன் சேமிப்பு, வெப்பக் குறைப்பு மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு ஆகியவற்றில் இந்த தரவுகளின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.
- தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சதுப்பு நில மீட்பு, பசுமை தமிழ்நாடு திட்டம், காலநிலை மாற்ற திட்டம், கடலோர பாதுகாப்பு திட்டம் போன்ற பல முயற்சிகளின் விளைவாக இந்த குறியீடு தயாரிப்பு சாத்தியமாகியுள்ளது.
- சென்னை நகர உயிரியல் பல்வகை குறியீடு "ஐசிஎல்இஐ தெற்காசியா", "சென்னை மாநகராட்சி" மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
- குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பசுமை இயக்க முயற்சிகளைத் தொடங்கி வைத்தார். பசுமை எரிசக்தித் துறையில் தன்னிறைவை எட்டும் வகையில், பெரிய முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கு இது உதவும்.
- அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டார் ஆலையில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பிரதமர், சுசுகியின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார வாகனமான இ விதாரா (“e VITARA) வை தொடங்கி வைத்தார்.
- கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- கத்தாரின் பாஸில் ரே 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ஆஷிமா அஹ்லாவத் 29 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
- மகளிருக்கான டிராப் அணிகள் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 319 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது.
- ஆடவருக்கான டிராப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவுனீஷ் மெந்திராட்டா 45 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மனு பாகர், இஷா, சிம்ரன்பிரீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,749 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
- மகளிர் ஜூனியருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பாயல் காத்ரி 36 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கமும், நம்யா கபூர் 30 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தேஜஸ்வினி 27 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த 3 பேரும் அணிகள் பிரிவில் 1,700 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
- காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் 193 கிலோ எடையை தூக்கி இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
- 84 கிலோ + 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி அவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார். 31 வயதான மீராபாய் . காயம் காரணமாக, சுமார் ஓராண்டுக்கு பிறகு போட்டியில் களமிறங்கி, 193 கிலோவை தூக்கி முதலிடம் பிடித்துள்ளார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 04-வது இடத்தை பிடித்தார்.
- இந்நிலையில் நடப்பாண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
- இதையடுத்து அமீராபாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மீராபாய் 48 கிலோ எடைப்பிரிவில் இதற்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 02 காமன்வெல்த் பதக்கமும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.