
22nd AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயற்குழு வாரியத் தலைவராக இந்தியா தேர்வு
- ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் வாரியத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
- தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் இம்மாதம் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற இந்நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் அதிகபட்ச வாக்குகளுடன் இந்தியா அந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டில் இந்த அமைப்பின் செயற்குழுத் தலைவராக இந்தியா பொறுப்பேற்று வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார்.
- போக்குவரத்துக்கான இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி, கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் 1.86 கிலோ மீட்டர் நீள 6 வழிச்சாலையை உள்ளடக்கிய, 1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 8.15 கிலோ மீட்டர் நீளமுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
- பக்தியர்பூர் – மொகாமா இடையே, தேசிய நெடுஞ்சாலை 31-ல் 1,900 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இந்தச் சாலை இப்பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதுடன் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கவும் உதவிடும்.
- பீகாரில் மின்சாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையில், 6,880 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பக்சர் அனல்மின் நிலையத்தை (660 மெகாவாட்) பிரதமர் தொடங்கி வைத்தார்.
- தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வை, கங்கை நதியில், தூய்மையைப் பராமரிப்பது, தண்ணீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுடன், அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், 520 கோடி ரூபாய் செலவில், தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர்ப் பாதை கட்டமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- 1,260 கோடி ரூபாய் செலவிலான நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அவுரங்காபாதில் தௌட்நகர் மற்றும் ஜெகன்னாபாதில் கழிவுநீர் கட்டமைப்புப் பணிகளும் அடங்கும்.
- ஜமுய் மற்றும் லக்சிசராயில் உள்ள பராகியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் மாற்றுப்பதை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.
- டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி விகித மறுசீரமைப்பு குறித்த மாநில நிதிஅமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இழப்பீட்டு மேல்வரி மற்றும் உயிர் & மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டி வரி விகிதங்களான 12% மற்றும் 28% சலுகைகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி மத்திய அரசு முன்மொழிந்த இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் சில ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற சிறப்பு விகிதத்தை அமல்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளது.
- கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூனியா் மகளிா் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஸி ரகுவன்ஷி 1-2 என்ற புள்ளிக் கணக்கில் சக வீராங்கனை யஷஸ்வி ரத்தோரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா். யஷஸ்வி ரத்தோருக்கு வெள்ளி கிடைத்தது.
- ஆடவா் ஸ்கீட் இறுதியில் ஹா்மேஹா் சிங் 53 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஜோதிராதித்யா சிங் 43 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றாா்.
- 10 மீ ஏா் ரைஃபிள் ஆடவா் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபிநவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோா் கொண்ட இந்திய அணி தங்கம் வென்றது.
- 10 மீ ஏா் ரைஃபிள் ஜூனியா் ஆடவா் தனிநபா் பிரிவில் அபிநவ் ஷா தங்கம் வென்றாா்.
- 10 மீ ஏா் ரைஃபிள் ஆடவா் பிரிவில் அா்ஜுன் பபுதா, ருத்ரான்ஷ் பட்டீல், கிரண் அங்குஷ் யாதவ் ஆகியோா் தங்கம் வென்றாா்.
- பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக தேர்தல் ஆணையம் அங்குச் சார் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தன.
- இதற்கு முன்பு சார் நடவடிக்கை தொடர்பாக நடந்த விசாரணையில், நீக்கப்பட்டோரின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடும்படி உத்தரவிடப்பட்டது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- அப்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் வசிப்பிடச் சான்றாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
- தேர்தல் ஆணையம் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டோரையும் சேர்க்கத் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- இந்த விவகாரத்தில் பீகார் அரசியல் கட்சிகள் மீது நீதிமன்றம் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 65 லட்சத்துக்கும் அதிகமான நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை என்று கேள்வி எழுப்பியது.
- வரைவு வாக்காளர் பட்டியலில் தனிப்பட்ட முறையில் சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமே ஆட்சேபணைகளைத் தெரிவித்துள்ளனர்.
- அதேநேரம் கட்சியாக எந்தவொரு கட்சியும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- இதைச்சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்" என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
- 8 வாரங்களுக்குள் அனைத்து தெரு நாய்களையும் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டது. இது தேசிய தலைநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் இந்த விவகாரம் இந்திய தலைமை நீதிபதி முன் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்தார்.
- இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 14 ஆம் தேதி, மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதி விக்ரம் நாட், நீதிபதி சந்தேப் மெட்டா மற்றும் நீதிபதி என்வி அன்ஜாரி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.ஆனால் இறுதி தீர்ப்பு வழங்காமல் தனது உத்தரவை ஒத்தி வைத்திருந்தது.
- இந்தநிலையில், இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, "பிடிபட்ட அனைத்து தெருநாய்களையும் விடுவிக்க வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்.
- அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் மக்களிடையே விடுவிக்கப்பட வேண்டும். மேலும் தெருநாய்கள் ஆக்ரோஷமாக மாறி பொது மக்களை கடித்தால், அவற்றை தனித்தனியாக சிறையில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கினர்.
- நகராட்சி உத்தரவின் பிரிவு 12, 12.1 மற்றும் 12.2 ஐப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நாய்களைப் பிடித்து, குடற்புழு நீக்க மருந்து, தடுப்பூசி போன்றவற்றைக் கொடுத்த பிறகு அதே பகுதியில் விடுவிக்க வேண்டும். ஆனால் ஆக்ரோஷமான அல்லது ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் விடுவிக்கப்படாது.
- பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பது தடைசெய்யப்படும். இதற்காக, ஒரு தனி பிரத்யேக உணவு மண்டலம் உருவாக்கப்பட வேண்டும்.
- தவறான உணவு காரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே தெரு நாய்களுக்கு உணவளிக்க ஒரு தனி மண்டலம் உருவாக்கப்பட வேண்டும்.
- நீங்கள் நினைத்த இடத்தில் எங்கு வேண்டும் என்றாலும் தெரு நாய்களுக்கு உணவளிக்க முடியாது. நாய்கள் தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாது.
- முந்தைய உத்தரவான பத்தி 13 ஐ மீண்டும் வலியுறுத்தி, எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ இந்த சேவைகளைத் தடுக்கக்கூடாது என்று திருத்தியது.
- மேலும், நாய் பிரியர்களும், அரசு சாரா நிறுவனங்களும் முறையே ₹ 25,000 மற்றும் ₹ 1 லட்சத்தை நீதிமன்ற பதிவேட்டில் டெபாசிட் செய்ய வேண்டும்.
- இது தவிர, யாராவது தெருநாய்களை தத்தெடுக்க விரும்பினால், அவர்கள் நீதிமன்றத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தெருநாய் வளர்க்க அனுமதி கிடைக்கும்.
- அனைத்து மாநிலங்களையும் மனதில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.