
21st AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
- பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலமாக விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விதிகளை மீறி ஆன்லைன் விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.
- வேளாண் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கடந்த ஜூலை மாதத்தில் 1.23 புள்ளிகள் அதிகரித்து 135.31 ஆக உள்ளது. மேலும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான குறியீடு 1.30 புள்ளிகள் அதிகரித்து 135.66 ஆக உள்ளது.
- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடுகள் 2019-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 கிராமங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரி தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட கணக்கிடப்பட்டுள்ளது.
- உணவுப் பொருட்களுக்கான குறியீட்டில் 1.94 புள்ளிகள் வேளாண் தொழிலாளர்களுக்கும் 2.16 புள்ளிகள் கிராமப்புற தொழிலாளர்களுக்கும் கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
- தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டெண் கடந்த ஜூன் மாதத்தில் 133.27 என்ற புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 131.68 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டெண் ஜூன் மாதம் 132.63 புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 131.12 ஆக குறைந்துள்ளது.
- பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை, உத்திப் படைகளின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து, இந்தியா புதன்கிழமை இடைநிலை வரம்பு கொண்ட 'அக்னி 5' ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இந்த ஏவுகணைச் சோதனையின்போது, அதன் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை மூலோபாயப் படைகளின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியா- இலங்கை கடற்படை இடையேயான கூட்டுப் பயிற்சி ஸ்லைநெக்ஸ்-2025 கொழும்பில் 2025 ஆகஸ்ட் 18 அன்று நிறைவடைந்தது.
- இப்பயிற்சியில் இந்தியக் கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் ஜோதி, ஐஎன்எஸ் ராணா ஆகிய கப்பல்களும், இலங்கை கடற்படை கப்பல்கள் எஸ்எல்என்எஸ் கஜபாகு, எஸ்எல்என்எஸ் விஜயபாகு ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.
- இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற இப்பயிற்சியின் துறைமுக பயிற்சி ஆகஸ்ட் 14 முதல் 16 வரையும், கடல்பகுதி பயிற்சி 17 முதல் 18 வரையிலும் நடைபெற்றது.
- அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்துஅதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.
- இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு நாசா மற்றூம் கனடா விண்வெளித் துறையினர் விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்.
- இந்த நிலையில் பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்து வந்த நிலையில் தற்போது யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
- ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய நிலவுக்கு தற்காலிகமாக S/2023 U1 என்று பெயரிடப்பட்டுள்ளது.