
1st AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு மற்றும் தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்
- சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி வரையறுக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கான தனித்துமான கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த இயக்கத்தினை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (Clean Tamil Nadu Company Limited) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- தூய்மை இயக்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்திற்கான நிலையான கழிவு மேலாண்மை தீர்வுகளுக்கான நடிவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.
- அதன் ஒரு பகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அதிநவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை - இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Indian Institute of Technology, Madras) இணைந்து செயல்படவுள்ளது.
- இதற்காக, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் (CTCL) நிர்வாக இயக்குநர் மற்றும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குநருடன் புரிந்துனர்வு ஒப்பந்தம் இன்றையதினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.
- ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்களை களைந்திட உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்தஆடைகள் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தப் பூங்காவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,197.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- இதுவரை ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளுக்காக 291.61 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தமிழகம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பிஎம் மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முறையே 1,894 கோடி ரூபாய் மற்றும் 2,063 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீ்ட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் கைத்தறி துறையை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும், கைத்தறி நெசவாளர்களின் நலன்களுக்காகவும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத் திட்டம் என்ற இரண்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.