Type Here to Get Search Results !

19th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


19th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
  • சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வர் முன்னதாக அறிவித்திருந்தார்.
  • இத்திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படை பணியின்போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் மகன்கள் மற்றும் மணமாகாத, கணவனை இழந்த மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
  • இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். அதேபோன்று, இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு குறைந்தபட்ச வயது இல்லை.
  • இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஏற்கெனவே மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் இதைப் போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது. 
  • ஏற்கெனவே அரசாணையில் நீக்கம் செய்யப்பட்ட விவசாய நடவடிக்கைகள் சார்ந்த தொழில்கள் மற்றும் பட்டுப்புழு, ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் பன்றி வளர்ப்பு தொழில்கள் தற்போது சோ்க்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம் - தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
  • சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
  • இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
  • இந்த அறிக்கையின் படி கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.
  • சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பாலச் சாலைகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.
  • இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில் அந்த வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து
  • இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
  • இதனைத் தொடர்ந்து, ரஷியாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவிகிதம் என இந்திய பொருள்களுக்கு மொத்தம் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.
  • இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதி கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதனை ஈடு செய்யும் விதமாக இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான 11 சதவிகித வரியை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
  • இந்த நிலையில், ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • ரஷியா - உக்ரைன் போரில் அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால், ரஷியாவை காரணம் காட்டி இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவிகிதம் கூடுதல் வரியை அமெரிக்கா விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்தயம் கட்டுவதை தண்டனைக்குரியதாக்குதல் மற்றும் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய ஆன்லைன் கேமிங் மசோதாவை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் கேமிங் ஆன்லைன் பந்தயத்தை தண்டனைக்குரியதாக்குதல் மற்றும் விளம்பரதாரர்கள் மற்றும் ஒப்புதல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் மசோதாவை ஆகஸ்ட் 19, 2025 அன்று மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.
  • இந்த சட்டம் போதைப்பொருள், நிதி மோசடி மற்றும் பந்தய பயன்பாடுகள் தொடர்பான ஏமாற்றும் விளம்பரம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறது. 2022 முதல், 1,400 க்கும் மேற்பட்ட சட்டவிரோத பந்தய தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த மசோதா பயனர் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான கேமிங்கை வலியுறுத்தும், அத்தகைய பயன்பாடுகளை ஆதரிக்கும் பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது கடுமையான பொறுப்புணர்வை முன்மொழிகிறது.
  • சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கேமிங் மசோதா, சட்டவிரோத பந்தயத்தைக் குறைப்பதில் வலுவான கவனம் செலுத்தி, இந்தியாவில் ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு பரந்த சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது. 
  • இந்த மசோதா ஆன்லைன் பந்தயத்தை தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்துகிறது, அங்கீகரிக்கப்படாத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆபரேட்டர்கள் மற்றும் பயனர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • குறிப்பாக, இது தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் பந்தய பயன்பாடுகளை ஊக்குவிக்கும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் போன்ற ஒப்புதல் அளிப்பவர்களுக்கு பொறுப்புணர்வை நீட்டிக்கிறது, தவறான விளம்பரங்களைத் தடுக்க அவர்களுக்கு அபராதம் விதிக்கிறது. 
  • இந்த அணுகுமுறை, கேமிங் துறையின் வளர்ச்சியை வளர்ப்பதற்கும், சுரண்டல் மற்றும் போதை பழக்கத்திலிருந்து நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்ட வேண்டும் என்ற இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ள கோட்டா நகரம் ராஜஸ்தானின் தொழில்துறை தலைநகராக திகழ்கிறது. அத்துடன் இந்தியாவின் கல்வி சார்ந்த பல்வேறு பயிற்சிகளுக்கு மையமாகவும் கோட்டா உள்ளது.
  • ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் பசுமை விமான நிலைய மேம்பாட்டிற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு 440.06 ஹெக்டேர் நிலப்பரப்பை ராஜஸ்தான் அரசு அளித்துள்ளது. 
  • ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளையும் போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் 1000 பயணிகளையும் கையாளும் வகையில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் விமானநிலைய முனைய கட்டடம் அமைப்பதும் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறவழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறவழிச் சாலையில் ராமேஸ்வர் முதல் தாங்கி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 110.87 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச் சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலதனச் செலவு மொத்தம் ரூ.8307.74 கோடி ஆகும்.
  • இந்த ஆறு வழிச்சாலை மிகவும் நகரமயமாக்கப்பட்ட கோர்தா, புவனேஸ்வர், கட்டாக் வழியாக அமைக்கப்படும். இந்த திட்டம் நிறைவேறும் போது ஒடிசாவுக்கும் இதர கிழக்குப் பகுதி மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக இருக்கும். 
  • அதிகப்படியான வர்த்தகப் போக்குவரத்தை மாற்றியமைப்பதன் மூலம் சரக்குகள் விரைவாக உரிய இடத்திற்கு சென்று சேர்வதற்கு பயன்படும் என்பதோடு போக்குவரத்து செலவைக் குறைக்கும் இந்த பிராந்தியத்தில் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  • இந்த புறவழிச்சாலை பணிகள் நிறைவடையும்போது முக்கியமான சமயத் தலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்பு வலுப்படுவதோடு பொருளாதார மையங்களோடும் இணைப்பு ஏற்படும்.
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கு புதிய வழிகள் திறக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 74.43 லட்சம் மனித வேலை நாட்களும் மறைமுகமாக 93.04 லட்சம் மனித வேலை நாட்களும் உருவாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel