
ரூ. 500 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் திட்டம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி செலவில் செமி கண்டக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், செமி கண்டக்டர் வடிவமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.250 கோடியும், செமி கண்டக்டர் சோதனை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அத்துடன், செமி கண்டக்டர் உபகரணங்கள் ஒப்புதல் திட்டத்திற்கு ரூ.50 கோடியும், சிறிய அளவிலான செமி கண்டக்டர் சிப் திட்டத்திற்கு ரூ.100 கோடியும், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ.25 கோடி என 05 வகையான திட்டங்களை செயல்படுத்த அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.
- மேலும், இந்த செமி கண்டக்டர் வடிவமைப்பு திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு 05 ஆண்டுகளுக்கு ஊதிய வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- செமி கண்டக்டர் உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் கோவை பல்லடத்தில் தலா 100 ஏக்கரில் செமி கண்டக்டர் உற்பத்தி இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.
- இங்குள்ள கேரள டிஜிட்டல் அறிவியல் பல்கலையின் துணைவேந்தராக சிசா தாமஸையும், ஏ.பி.ஜே., அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தராக கே. சிவபிரசாதையும் நியமனம் செய்து கடந்த ஆண்டு நவம்பரில் ஆளுநராக இருந்த ஆரிப் முஹமது கான் ஆணையிட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கேரளாவில் 2 பல்கலை.களில் துணை வேந்தர்களை நியமிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையில் 2 வாரத்தில் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- விளம்பரங்களை வெளியிட்டு 4 வாரத்தில் விண்ணப்பங்கள் பெற்று 3 மாதத்தில் நியமனங்களை முடிக்கவும் ஆணையிட்டுள்ளது.
- ஆளுநர்களின் தலையீட்டால் பல மாநிலங்களில் பல்கலை. துணை வேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதால், துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான பட்டியலை தயார் செய்ய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்சு தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.