
15th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
79வது சுதந்திர தினம் - தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்
- நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
- இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்கின்றனர்.
- தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றிவருகிறார்.
- இந்த வீர விடுதலைத் திருநாளிலும் ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
- மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் ும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மேற்சொன்ன ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்.
- நாடு முழுக்க இன்று உற்சாகத்தோடு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.
- பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.
- ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். அதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது.
- ஜிஎஸ்டி குறைப்பால் ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் நிதி நிலைமை மேம்படும்.
- இளைஞர்களுக்காக ரூ.1லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும். புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
- வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். புதிதாக தனியார் துறையில் பணியில் இணையும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருகின்றனர். மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை. பருப்பு உற்பத்தியில் முதல் இடம். அரிசி, கோதுமை உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.
- இப்பொழுது அரசும், திட்டங்களும் மக்களின் வீடு தேடி வருகிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டு உள்ளது.
- நாட்டில் 3ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள உடல் பருமன் கவலை அளிக்கிறது.
- மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும். மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி. தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் நிறைவு செய்துள்ளது. தேசத்திற்கான உயிர் தியாகங்களை ஆர்எஸ்எஸ் செய்துள்ளது.
- ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நமது நாட்டின் தலைவிதியை மாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். இளைஞர்களிடம் நான் வேண்டுக்கோள் விடுக்கிறேன்.
- தேசிய மாற்றத்திற்கான இந்த நோக்கத்திற்கு முன்னோக்கி செல்ல நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். பழங்குடியினரின் நிலத்தை ஊடுருவல்காரர்கள் அபகரிக்க இந்தியா அனுமதிக்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.