Type Here to Get Search Results !

14th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தூய்மை பணியாளர்களுக்கு காலை இலவச உணவு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்
  • மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் காலையில் கூடியது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது.
  • பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. அதில் முக்கியமாக தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டது.
  • இந்த அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 
  • அறிவிப்பு 1 - தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
  • அறிவிப்பு 2 – தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதில்கால நலன்களையும், வாழ்வாதரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில், இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இந்தப் பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின் போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.
  • அறிவிப்பு 3 - தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில், 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு  6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • அறிவிப்பு 4 - தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர் கட்டணச் சலுகைகள் மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில், “புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்”  ஒன்று செயல்படுத்தப்படும். 
  • அறிவிப்பு 5 – நகர்ப்புறங்களில், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30,000 குடியிருப்புக்கள் கட்டித் தரப்படும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் இந்த வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
  • அறிவிப்பு 6 - தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தூய்மை பணியாளர்களுக்கு 6 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் தமிழக அரசுடன் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
  • முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. 
  • பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது.
  • ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் - 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு
  • ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
  • இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கவாதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் முரித்கே மற்றும் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத குழுக்களின் தலைமையகங்களையும், பாகிஸ்தான் ராணுவ தளவாடங்களையும் இந்திய விமானப்படை தாக்கியது.
  • இதில், சிறப்பாக பணியாற்றிய 9 இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு நாட்டின் மிக உயர்ந்த மூன்றாவது வீரதீர பதக்கமான ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எதிரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் துணிச்சலாக செயல்பட்ட ஒருவருக்கு சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அசோக சக்ரா மற்றும் கீர்த்தி சக்ராவுக்கு அடுத்த நிலையில் உள்ள விருதாகும். மேலும் 26 பேருக்கு வாயு சேனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குரூப் கேப்டன்கள் ஆர்.எஸ். சித்து, மணீஷ் அரோரா, அனிமேஷ் பட்னி மற்றும் குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்க்வாட்ரான் தலைவர்கள் சர்தக் குமார், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மாலிக் மற்றும் விமான லெப்டினன்ட் ஏ.எஸ். தாக்கூர் ஆகியோருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel